1991 ஆம் ஆண்டு டாடா நிறுவனம் மீடியம் சைஸ் எஸ்யூவி கார் மாடலான சியராவை வெளியிட்டது. இந்த கார் அப்பொழுது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சுமார் 12 வருடங்களாக டாடா நிறுவனம் உற்பத்தி செய்து வந்த இந்த மாடல் காரை 2003 ஆம் ஆண்டு நிறுத்தி வைத்தது. தற்பொழுது 22 வருடங்கள் கழித்து மீண்டும் டாடா நிறுவனம் சியரா எஸ் யூ வி மாடல் காரை புது பொலி உடனும், புது அம்சங்களுடனும் வருகிற நவம்பர் 25ஆம் தேதி வெளியிட உள்ளது.
டாட்டா வெளியிட இருக்கும் புது சியரா எஸ் யூ வி கார் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் இஞ்சின் என இரண்டு மாடல்களில் வெளியாக போகிறது. காரின் விலை சுமார் 12 முதல் 18 லட்சம் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சியரா காரின் சிறப்பம்சங்கள் குறித்து சிலவற்றை காண்போம்.
முதன்முறையாக, சியரா கார் டேஷ்போர்டு முழுவதும் நீட்டிக்கப்பட்ட மூன்று திரை அமைப்பை டாடா நிறுவனம் நிறுவியுள்ளது. இத்திரையில் இன்ஃபோடெயின்மென்ட், இன்ஸ்ட்ரூமென்டேஷன் மற்றும் பயணிகள் பக்க காட்சி ஆகியவற்றை ஒரே தடையற்ற பேனலில் கலக்கும் காக்பிட்டை டாடா நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இன்ஃபோடெயின்மென்ட் திரைக்குக் கீழே நிலைநிறுத்தப்பட்டுள்ள சவுண்ட் பார் JBL சிஸ்டம் ஆகும். டால்பி அட்மாஸ் ஆதரவுடன் கேபின் ஒலியியலை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கதவு மற்றும் பூட் ஸ்பீக்கர்களுடன் இணைந்து, சவுண்ட் பார் பயணிகளுக்கு சிறந்த ஒலி அனுபவத்தை கொடுக்கும் என்று நம் எதிர்பார்க்கலாம்.

பழைய மாடல் சியரா காரின் ட்ரேட் மார்க் காரின் வெளிக்கண்ணாடியை சமகால அமைப்பிற்கு ஏற்ப மாற்றியுள்ளது, அதில் பனோரமிக் சன்ரூஃப், ஃப்ளஷ்-மவுண்டட் ஜன்னல்கள் மற்றும் கருப்பு நிற கூரை ( சன் ரூப் ) உறுப்பு ஆகியவை அடங்கும். இந்த புதிய வடிவமைப்பு தற்போதைய பாதுகாப்பு தரங்களுடன் ஒத்துப்போகும் அதே வேளையில் பழைய சியாரா காரின் உணர்வை நமக்கு தந்துவிடும்.
https://x.com/volklub/status/1990328692338569420?t=OmMyG_FYqxvj9ya16a9Bmw&s=19
ஓட்டுனருக்கு தகுந்தவாறு காற்றோட்டமான இருக்கை, புதிய டிசைன் அம்சம் கொண்ட ஏசி வென்ட், பின்புறாய் இருக்கையில் மூன்று ஹெட் ரெஸ்ட், 65 வாட்ஸ் பவரில் மொபைலை சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய சிறப்பம்சம், ஃபோர்ஸ் ஸ்போக் ஸ்டேரிங் வீல், பயணிகளுக்கு ஏற்றவாறு சன் ஸ்கிரீன் திரை, டெரைன் மோட், 450 லிட்டர் திறன் அளவு கொண்ட பூட் ஸ்பேஸ் என பல்வேறு புதிய அம்சங்களுடன் வருகிற நவம்பர் 25ஆம் தேதி இந்தப் புதிய டாட்டா சியரா கார் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
