இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு விஷயமாக குறுகிய வடிவ காணொளிகள், அதாவது ரீல்ஸ் மாறிவிட்டன. பொழுதுபோக்கிற்காகவும், தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்காகவும் இவை பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், இதன் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்துகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இருப்பினும், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ரீல்ஸ் (Reels) காண்பது அன்றாட செயல்களில் ஒன்றாகிவிட்டது. வேலைப்பளு, அவசர வாழ்க்கை ஆகியவற்றில் இருந்து ப்ரேக் எடுக்க ரீல்ஸ் காண்பது, அதிக நேரம் ஸ்க்ரால் செய்வது ஆகிய பழக்கம் பலருக்கும் இருக்கலாம். ஆனால், அதிக நேரம் ரீஸ்ல் பார்ப்பது, ஒரு நாள் கூட ரீல்ஸ் காணாமல் இருக்க முடியாது என்பவர்களுக்கு சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகள் பற்றி தெரிஞ்சுக்கோங்க.

அதாவது, புகை மற்றும் மதுபழக்கத்தை விட மூளைக்கு 5 மடங்கு பாதிப்பை அதிக நேரம் ரீல்ஸ் பார்ப்பது  உண்டாக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. வேகமான காட்சிகள் மூளைக்கு உடனடி மனநிறைவை கொடுத்து, இன்னும் அதிகமாக பார்க்க ஏங்க வைக்கின்றன.இதனால் ஆழமான சிந்தனை குறைவது மட்டுமின்றி, கவனச்சிதறல், நினைவாற்றல் குறைவு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version