இன்றைய வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மனிதர்களின் வாழ்க்கையில் புற்றுநோய் தீவிரமாகியுள்ளன. புற்றுநோய் என்று ஒற்றை வார்த்தையில் இந்த நோயை சொல்லிவிட முடியாது. 100க்கும் மேற்பட்ட புற்றுநோய்கள் உள்ளன. உடலில் தொடங்கும் இடம் மற்றும் திசுக்களின் வகையை பொறுத்து இவை வகைப்படுத்தப்படுகிறது. எனினும் பொதுவான புற்றுநோய்களாக மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், இரத்த புற்றுநோய், கருப்பை தொடர்பான புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் என பலவகையான புற்றுநோய்கள் உள்ளன.

புற்று நோய் பாதிப்பு, அதன் தீவிரம், சிகிச்சை பொறுத்து உயிர்வாழும் காலம் மாறுபடலாம் என்பதால் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதும் சிகிச்சையும் அவசியம். தற்போது புற்றுநோய்க்கு கீமோதெரபி, அறுவை சிகிச்சை, ரேடியேஷன், ஹார்மோன் சிகிச்சைக்கு போன்ற முக்கிய சிகிச்சைகளும் செய்யப்படுகின்றன.

இருப்பினும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கேன்சர் தடுப்பூசி தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இருப்பினும் இந்த கேன்சருக்கான ஊசி எப்போது பயன்பாட்டுக்கு வரபோகிறது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்தநிலையில் தினமும் இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்தால் ஓரளவாவது புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கலாம் என்று கூறப்படுகிறது. அரை இன்ச் பச்சை மஞ்சள், 1 நெல்லிக்காய், இரண்டு இன்ச் அளவில் இஞ்சி துண்டு, இரண்டு மிளகு, தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளுங்கள்,. இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதை குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும், வளர்சிதை மாற்றம் மேம்படும், கேன்சர் போன்ற கொடிய நோய்கள் உங்களை அண்டாது. என சித்தா மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version