இட்லி, தோசை என்று தினமும் ஒரே மாதிரியான காலை உணவால் சற்று சலிப்பாக இருக்கிறதா? அப்படியானால், உங்கள் சமையலறையில் சற்றே புதுமையாகவும் சத்தானதாகவும் ஒரு டிபனை தயார் செய்யலாம். உங்கள் வீட்டில் ஓட்ஸ் இருக்கிறதா? அதையும், சிறிது பசலைக்கீரையும் சேர்த்தால், உடனே 15 நிமிடத்தில் சூப்பரான “ஓட்ஸ் பசலைக்கீரை பணியாரம்” ரெடியாகும்!

பசலைக்கீரின் சத்து, ஓட்ஸின் நன்மை, காய்கறிகளின் கலவை— குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் இந்த ஹெல்தி டிபன், தேங்காய் சட்னி அல்லது கார சட்னியுடன் நன்றாகச் சேரும்.

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ்

 

பொட்டுக்கடலை

 

அரிசி மாவு

 

தயிர்

 

பசலைக்கீரை

 

பச்சை மிளகாய்

 

கொத்தமல்லி

 

இஞ்சி

 

வெங்காயம்

 

கார்ன்

 

பட்டாணி

 

கேரட்

 

நெய்

 

கடுகு

 

உளுத்தம் பருப்பு

 

கடலைப்பருப்பு

செய்முறை:

ஓட்ஸ், பொட்டுக்கடலை, தயிர், பசலைக்கீரை உள்ளிட்டவற்றுடன் தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைக்கவும்.

வெங்காயம், கார்ன், கேரட் உள்ளிட்டவை சேர்த்து கலக்கவும்.

சிறிய அளவில் தாளிப்பைச் செய்து மாவுடன் கலந்து, பணியாரக் கல்லில் ஊற்றி வெந்து வரும்போது எடுத்துக்கொள்ளவும்.

சுவையும் சத்தும் மிகுந்த ஓட்ஸ் பசலைக்கீரை பணியாரம் தயார்!.

Share.
Leave A Reply

Exit mobile version