வாக்குச்சாவடி முதல் நிலை முகவர்கள் பயிற்சி முகாம் டெல்லியில் வரும் 22 மற்றும் 23ம் தேதிகளில் நடைபெறுகிறது இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வாக்குச்சாவடி முதல் நிலை முகவர்கள் கலந்து கொண்டனர்.
அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள செல்பவர்களுக்கு செய்யப்படவுள்ள முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்ட நாயகி தலைமையில் தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திமுக, அதிமுக, தேமுதிக, சிபிஐ, நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய தேசிய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட 12 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம் எம் அப்துல்லா இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.இக்கூட்டத்தில் டெல்லியில் நடைபெறும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள செல்பவர்களுக்கு செய்யப்படவுள்ள முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், முகவர்கள் வாக்குச்சாவடியில் நடந்துக்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும், டெல்லியில் அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்தும் விவரிக்கப்பட்டது.