Close Menu
    What's Hot

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    பள்ளி வளாகங்களில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்த வழக்கு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    வரும் 18ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர்: எம்.எல்.ஏ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி நாளை தொடக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»Featured»மனைவியை விருந்தாக்கிய நபர்… சிக்குவாரா திமுக பிரமுகர்?
    Featured

    மனைவியை விருந்தாக்கிய நபர்… சிக்குவாரா திமுக பிரமுகர்?

    Editor TN TalksBy Editor TN TalksMay 19, 2025Updated:May 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dmk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கல்லூரி மாணவியை திருமணம் செய்த திமுக நிர்வாகி ஒருவர், திமுக பிரமுகர்களுக்கு தன்னை இரையாக்க முயற்சிப்பதாக அம்மாணவி பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். திரைப்பட பாணியில் நடந்துள்ள இச்சம்பவம் குறித்து விரிவாகப் பார்க்கலாம்..

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த10-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான இபிஎஸ் பிறந்தநாள் விழா அரக்கோணத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ ரவியை, நட்டநடு சாலையில் சந்தித்த மாணவி, தனக்கு நீதி பெற்றுத் தரவேண்டும் எனக் கூறி கண்ணீர் விட்டுள்ளார்.

    இது தொடர்பாக அப்பெண் கொடுத்த மனுவில், ”அரக்கோணம் காவனூர் பகுதியை சேர்ந்த தெய்வசாயல் என்பவர் திமுக ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளராக உள்ளார். ஏற்கனவே திருமணமான அவர், தன்னை காதலிப்பதாக ஏமாற்றி கடந்த ஜனவரி 31-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். 2 மாதம் திருமண வாழ்வு சுமூகமாக சென்றுக் கொண்டிருக்க, திடீரென தெய்வசாயல், தன்னை திமுக பிரமுகர்களுக்கு இரையாக்க முயற்சி செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தினமும் தன்னை கடுமையாக தாக்கினார்”.

    ”மன உளைச்சலில் இருந்த நான் தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். என்னை காப்பாற்றிய உறவினர்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற வைத்தனர். ஆனால் தற்கொலை முயற்சி குறித்து காவல்துறை எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார். தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து தன்னை அழைத்து செல்ல முயற்சி செய்ததோடு, தன்னுடன் வரவில்லை என்றால் பெற்றோரை கொலை செய்து விடுவேன்” என மிரட்டினார்.

    அவரது மிரட்டலுக்கு அஞ்சி அவருடன் சென்ற போது, மீண்டும் மீண்டும் தன்னை கொடுமை செய்ததால், நிரந்தரமாக தாய் வீட்டிற்கு வந்து விட்டேன். அத்தோடு எனது கல்லூரி படிப்பையும் தொடர்ந்து வருகிறேன். ஆனால் தெய்வசாயல், தொடர்ந்து எனக்கு மிரட்டல் விடுத்து வருவதாகவும், புகார் அளிக்க சென்றால் இது எங்கள் எல்லை இல்லை என அரக்கோணம் காவல்துறையினர் திருப்பி அனுப்பி விடுவதாகவும் கூறியிருக்கிறார்.

    தொடர்ந்து அரக்கோணம் தாலுகா காவல்நிலையம், ராணிப்பேட்டை மாவட்ட காண்காணிப்பாளர் அலுவகலத்திலும் புகார் அளித்தேன். அங்கும் எனது புகாரை எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். மேலும் தினமும் தன்னை கடித்தும், அடித்தும் ஏற்படுத்திய காயங்களை எம்.எல்.ஏவிடம் காட்டி அழுதுள்ளார் அப்பெண். இதனையடுத்து அரக்கோணம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தெய்வசாயல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    DMK அரக்கோணம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை!!
    Next Article சாம்சங் விவகாரம்.. முத்தரப்பு பேச்சுவார்த்தை வெற்றி.. வாக்குறுதி அளித்த அரசு!
    Editor TN Talks

    Related Posts

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    June 15, 2026

    பள்ளி வளாகங்களில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்த வழக்கு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    June 15, 2026

    வரும் 18ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர்: எம்.எல்.ஏ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி நாளை தொடக்கம்!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    பள்ளி வளாகங்களில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்த வழக்கு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    வரும் 18ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர்: எம்.எல்.ஏ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி நாளை தொடக்கம்!

    3 மாதம் நீடித்த ஈரான் – அமெரிக்க போர்!. அதிக இழப்புகளைச் சந்தித்தது யார்?

    காலை உணவுத் திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவாக்கம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.