Close Menu
    What's Hot

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»”இனி அமித்ஷா தலையிடமாட்டார்…எல்லாமே நான்தான்” – அதிரடி காட்டிய இபிஎஸ்
    அரசியல்

    ”இனி அமித்ஷா தலையிடமாட்டார்…எல்லாமே நான்தான்” – அதிரடி காட்டிய இபிஎஸ்

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 18, 2025Updated:September 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    amtish down 1756000143
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுகவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலையீடு இருக்காது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையனின் சர்ச்சையால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் டெல்லியில் அமித்ஷாவை எடப்பாடி சந்தித்து பேசியது கவனத்தை ஈர்த்தது.

    இதையடுத்து தமிழ்நாட்டிற்கு மீண்டும் திரும்பிய எடப்பாடி பழனிசாமி சேலம் ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தது வெளிப்படையானது. அரசு காரில் சென்று தான் அவரை சந்தித்தேன். முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தோம். என் எழுச்சி பயணம் சிறப்பாக இருப்பதாக கூறி அமித்ஷா பாராட்டினார்.

    அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக நான் அமித்ஷாவிடம் பேசவில்லை. அதிமுக விவகாரத்தில் பாஜக தலையீடு இருக்காது. அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டேன் என்று அமித்ஷாவே கூறியுள்ளார். யார்கிட்டையும் முகத்தை மறைக்க வேண்டிய முகம் எனக்கு இல்லை. கூட்டணியை பொறுத்தவரை அதிமுகவில் நான், பாஜகவில் அமித்ஷா கூறுவது தான் இறுதி.

    அதிமுகவில் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களிடம் தொடர்பு வைத்திருந்தால் நடவடிக்கை பாயும் என்பதே சிறப்பு தீர்மானம். அதன்படி செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. நான் முகமூடி அணிந்து சென்றதாக டிடிவி தினகரன் விமர்சித்தார். அவர் தான் முகமூடியுடன் கூட்டணிக்குள் வர முயற்சிக்கிறார்” என அதிரடியாக பேசியுள்ளார்.

    ADMK amitshah BJP Edappadi Palaniswami EPS
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article”வாக்கு திருட்டில் ஹைட்ரஜன் வெடிகுண்டு வரப்போகிறது” – ஆதாரத்துடன் கூறிய ராகுல்காந்தி
    Next Article கோயில் வழிபாட்டு உரிமையில் சாதி பாகுபாடு எதற்கு? – செல்வப்பெருந்தகை கண்டனம்
    Editor TN Talks

    Related Posts

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    April 10, 2026

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    April 10, 2026

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    April 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    Trending Posts

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    April 10, 2026

    ஜன நாயகன் படத்தை டவுன்லோட் செய்யாதீங்க!. படக்குழுவினர் கடும் எச்சரிக்கை!

    April 10, 2026

    வாக்கு வேட்டையில் முதல்வர் ஸ்டாலின்!. மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வாக்கு சேகரிப்பு!

    April 10, 2026

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    April 10, 2026

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.