Close Menu
    What's Hot

    ராகுல் காந்தியின் அடிக்கடி வெளிநாட்டுப் பயணம்..!! போஸ்டர் மூலம் பொளந்து காட்டிய பாஜக..!!

    எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்று 2 ஆண்டுகள்..!! மக்களின் குரலாக தொடரும் பயணம்..!!

    இந்தியா-ஜப்பான் உறவுகளில் புதிய அத்தியாயம்: பிரதமர் சனாயே தகாயிச்சி அடுத்த வாரம் டெல்லி வருகை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
    தமிழ்நாடு

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    Editor web3By Editor web3April 10, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Election Commission
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் இறுதி வேட்பாளர் பட்டியலுடன் முழுமையடைந்துள்ள நிலையில், ஜனநாயகத் திருவிழாவிற்கான அதிகாரப்பூர்வ வேட்பாளர் விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 4,051 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் மோதுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பெறப்பட்ட இறுதி வேட்பாளர் பட்டியலின் அடிப்படையில், சென்னை மாவட்டம் அதிகபட்ச வேட்பாளர்களைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது. சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் மட்டும் மொத்தம் 419 பேர் போட்டியிடுகின்றனர்.

    மாவட்ட வாரியான புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, வேட்பாளர்களின் எண்ணிக்கையில் பெரும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 166 பேர் போட்டியிடும் நிலையில், கரூர் தனித் தொகுதியில் மட்டும் அதிகபட்சமாக 79 பேர் களம் காண்கின்றனர். அதேபோல் சேலத்தில் 193 பேரும், ஈரோட்டில் 188 பேரும், கோவையில் 183 பேரும் போட்டியிடுகின்றனர். இதற்கு நேர்மாறாக, மலை மாவட்டமான நீலகிரியில் உள்ள 3 தொகுதிகளில் மிகக் குறைவாக மொத்தம் 18 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர்; அதாவது ஒவ்வொரு தொகுதியிலும் தலா 6 பேர் மட்டுமே வேட்பாளர்களாக உள்ளனர்.

    தொகுதி வாரியான கணக்கீட்டில், கரூர் தொகுதி 79 வேட்பாளர்களுடன் மாநிலத்திலேயே அதிக வேட்பாளர்கள் கொண்ட தொகுதியாக மாறியுள்ளது. அதே சமயம், திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் தொகுதியில் மிகக் குறைவாக 5 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். திருச்சி (171), விருதுநகர் (135), நாமக்கல் (132), விழுப்புரம் (132) போன்ற மாவட்டங்களிலும் வேட்பாளர் எண்ணிக்கை சதத்தைத் தாண்டியுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்தல் பிரச்சாரம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    1.சென்னை – 419 பேர்  (16 தொகுதி)

    2.திருவண்ணாமலை  -156 பேர்  (8 தொகுதி)

    3.திருவள்ளூர் -160 பேர்  (10 தொகுதி)

    4.காஞ்சிபுரம் -65 பேர் (4 தொகுதி)

    5.செங்கல்பட்டு -131 பேர்  (7 தொகுதி)

    6.ராணிப்பேட்டை -65 பேர்  (4 தொகுதி)

    7.வேலூர் -65 பேர் (5தொகுதி)

    8.கிருஷ்ணகிரி- 79 பேர் (6தொகுதி)

    9.திருப்பத்தூர் – 74 (4 தொகுதி )

    10.கள்ளக்குறிச்சி – 72 பேர் (4 தொகுதி)

    11.விழுப்புரம் -132 பேர்  (7 தொகுதி)

    13.கடலூர் – 127 பேர் (9 தொகுதி)

    13.தருமபுரி -83 பேர் ( 5 தொகுதி)

    14.கரூர் – 166  பேர் (4 தொகுதி) 79 பேர் கரூரில் அதிக வேட்பாளர் போட்டி

    15.சேலம் – 193 பேர்  (11 தொகுதி)

    16.ஈரோடு -188 பேர் (8 தொகுதி)

    17.திருப்பூர் – 116 பேர் (8 தொகுதி)

    18.கோயம்புத்தூர் – 183 பேர்  (10 தொகுதி)

    19.திருச்சி – 171 பேர்  (9 தொகுதி)

    20.நீலகரி -18 பேர் (3 தொகுதி) ஒவ்வொரு தொகுதியிலும்  தலா ஆறு பேர் போட்டியிடுகின்றனர்.

    21.அரியலூர் – 34 பேர் (2 தொகுதி)

    22.பெரம்பலூர் – 30 பேர் (2 தொகுதி)

    23.மயிலாடுதுறை – 45 பேர்  (3 தொகுதி)

    24.நாகப்பட்டினம் –  31 பேர் (3 தொகுதி)

    25.தஞ்சாவூர் – 94 பேர்  (8தொகுதி)

    26.திருவாரூர் – 46 பேர்  (4 தொகுதி)

    27.தேனி -65 பேர்  (4தொகுதி)

    28.திண்டுக்கல் – 115 பேர்  (7 தொகுதி)

    29.மதுரை – 129 பேர் (10 தொகுதி)

    30.ராமநாதபுரம் -60 பேர் (4தொகுதி)

    31.விருதுநகர் – 135 பேர் (7 தொகுதி)

    32.தூத்துக்குடி – 92 பேர்  (6 தொகுதி)

    33.கன்னியாகுமரி -85 பேர் (6 தொகுதி)

    34.சிவகங்கை –  71 பேர்  (4 தொகுதி)

    35.தென்காசி -95 பேர்  (5 தொகுதி)

    36.திருநெல்வேலி – 90 பேர்  (5 தொகுதி)

    37.புதுக்கோட்டை – 109 பேர்  (6 தொகுதி)

    38.நாமக்கல் – 132 பேர் (6 தொகுதி)

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!
    Next Article காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.
    Editor web3
    • Website

    Related Posts

    ராகுல் காந்தியின் அடிக்கடி வெளிநாட்டுப் பயணம்..!! போஸ்டர் மூலம் பொளந்து காட்டிய பாஜக..!!

    June 26, 2026

    எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்று 2 ஆண்டுகள்..!! மக்களின் குரலாக தொடரும் பயணம்..!!

    June 26, 2026

    இந்தியா-ஜப்பான் உறவுகளில் புதிய அத்தியாயம்: பிரதமர் சனாயே தகாயிச்சி அடுத்த வாரம் டெல்லி வருகை..!!

    June 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ராகுல் காந்தியின் அடிக்கடி வெளிநாட்டுப் பயணம்..!! போஸ்டர் மூலம் பொளந்து காட்டிய பாஜக..!!

    எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்று 2 ஆண்டுகள்..!! மக்களின் குரலாக தொடரும் பயணம்..!!

    இந்தியா-ஜப்பான் உறவுகளில் புதிய அத்தியாயம்: பிரதமர் சனாயே தகாயிச்சி அடுத்த வாரம் டெல்லி வருகை..!!

    தமிழக காங்கிரஸில் புதிய மேலிடப் பொறுப்பாளர் யார்..?? எதிர்பார்ப்பு உச்சம்..!!

    ஆபரேஷன் சிந்தூரில் உயிர்நீத்த 6 வீரர்கள் யார் யார்..?? முதன்முறையாக வெளியான தகவல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.