Close Menu
    What's Hot

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»‘‘திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கஞ்சா கலாச்சாரம் உச்சத்தை அடைந்துள்ளது’’ – அன்புமணி
    அரசியல்

    ‘‘திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கஞ்சா கலாச்சாரம் உச்சத்தை அடைந்துள்ளது’’ – அன்புமணி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 29, 2025Updated:December 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anbumani 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்து விட்ட திமுக அரசு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களைக் கட்டுப்படுத்துவதில் படுதோல்வி அடைந்து விட்டது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் இருந்து திருத்தணி சென்ற வடமாநில இளைஞரை திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் கஞ்சா போதையில் இருந்த 4 சிறுவர்கள் சரமாரியாக வெட்டி ரீல்ஸ் எடுத்து வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டின் சிறுவர்களையும், இளைஞர்களையும் சீரழித்து வரும் போதைப் பொருள்களை கட்டுப்படுத்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

    மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ் என்ற தொழிலாளி சென்னையில் இருந்து திருத்தணிக்கு மின்சார தொடர்வண்டியில் பயணம் செய்திருக்கிறார். திருவாலங்காடு தொடர்வண்டி நிலையத்தில் அந்த தொடர்வண்டியில் ஏறிய 4 சிறுவர்கள் கஞ்சா போதையில் தங்களிடமிருந்த அரிவாளை எடுத்து அவரை வெட்டுவது போல மிரட்டியுள்ளனர். அதை அவர்களில் ஒருவன் காணொலியில் பதிவு செய்திருக்கிறான். இதனால் அச்சமடைந்த சுராஜ், அவர்களை தடுத்து விட்டு, திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் இறங்கியுள்ளார்.

    ஆனால், அவரை விடாமல் துரத்திச் சென்ற சிறுவர்கள் தொடர்வண்டி நிலையத்தில் வைத்து அந்த இளைஞரை சரமாரியாக வெட்டி அதை காணொலியாக பதிவு செய்து இணையத்தில் பரவவிட்டுள்ளனர். படுகாயங்களுடன் மயங்கிக் கிடந்த இளைஞரை அங்குள்ள மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த நிகழ்வு குறித்த செய்தியை கேட்கும்போதே நெஞ்சம் பதறுகிறது; உடல் நடுங்குகிறது.

    பள்ளி செல்ல வேண்டிய வயதில் உள்ள சிறுவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி பொதுமக்கள் முன்னிலையில் தொடர்வண்டியிலும், தொடர்வண்டி நிலையத்திலும் ஒருவரை அரிவாளால் வெட்டி படம் பிடித்து வெளியிடத் துணிகிறார்கள் என்றால் தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கமும், அதனால் ஏற்படும் தாக்கமும் எந்த அளவுக்கு பெருகியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். இந்த சீரழிவுக்கு முழுக்க முழுக்க திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

    திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் தமிழ்நாட்டில் கஞ்சா கலாச்சாரம் உச்சத்தை அடைந்தது. இது தொடர்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் 29-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

    அதைத் தொடர்ந்து 28.07.2022-ஆம் நாள் போதைப் பொருள்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி எனது தலைமையில் போராட்டமும் நடத்தப்பட்டது. ஆனால், எந்த பயனும் இல்லை.

    தமிழ்நாட்டிற்கு ஆந்திராவிலிருந்து தான் அதிக அளவில் கஞ்சா கடத்தி வரப்படுகிறது என்பதால் எல்லையோர மாவட்டங்களில் அதன் புழக்கம் அதிகமாக இருக்கிறது என்றும், அதைத் தடுக்க வேண்டும் என்றும் மக்கள் உரிமை மீட்பு பயணத்தின் போது திருத்தணியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினேன்.

    கடந்த வாரம் திருத்தணியில் நடைபெற்ற மகளிர் உரிமை மீட்புப் பயணத்தில் பேசிய பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணியும் இதே கருத்தை வலியுறுத்தினார். அடுத்த வாரத்திலேயே அதே திருத்தணியில் கஞ்சா போதையில் சிறுவர்கள் அட்டகாசம் செய்திருப்பதிலிருந்தே இந்த விஷயத்தில் திமுக அரசு எந்த அளவுக்கு செயலற்று கிடக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

    அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்து விட்ட திமுக அரசு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களைக் கட்டுப்படுத்துவதில் படுதோல்வி அடைந்து விட்டது. அதனால் பொதுவெளிகளில் பொதுமக்கள் அச்சமின்றி நடமாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு காரணமான திமுகவுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள்.” என தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉன்னாவ் வன்கொடுமை வழக்கு!. எந்த சூழ்நிலையிலும் குல்தீப் செங்காரை விடுவிக்க முடியாது!. ஜாமீனை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!
    Next Article சிவகார்த்திகேயன் உடன் இணையும் விஜய் ஆண்டனி!
    Editor TN Talks

    Related Posts

    திருமாவை நெருக்கும் சில சிறுத்தைகள்..! திமுக போடும் மாஸ்டர் பிளான்!

    February 13, 2026

    ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டில் எடுபடாது; ஏற்கப்படாது…! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து..!

    February 13, 2026

    ஜெயலலிதா பிறந்தநாளில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!. EPS திட்டம்!.

    February 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    Trending Posts

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    February 15, 2026

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    February 15, 2026

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    February 15, 2026

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    February 15, 2026

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    February 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.