Close Menu
    What's Hot

    ஆன்லைனில் வாடகை வீடு தேடுகிறீர்களா? சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி பணத்தை இழந்த மருத்துவர்!. 

    ஐசிசி டி20 தரவரிசை!. டாப் 10ல் நுழைந்த இஷான் கிஷன்!. அசைக்க முடியாத முதலிடம்!

    மாநிலங்களவை தேர்தல்!. காங்கிரஸுக்கு மேலும் ஒரு சீட்!. திமுகவின் வியூகம் என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»திமுக அரசின் பொய் தொழில் முதலீடுகள்: ஆவண புத்தகத்தை வெளியிட்டார் அன்புமணி
    அரசியல்

    திமுக அரசின் பொய் தொழில் முதலீடுகள்: ஆவண புத்தகத்தை வெளியிட்டார் அன்புமணி

    Editor TN TalksBy Editor TN TalksNovember 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anbumani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாமக சார்​பில், திமுக ஆட்சி​யின் தொழில் முதலீடு​கள் குறித்த உண்மை நிலை என்ன என்​பதை விளக்​கும் வகை​யில் ஆவண புத்​தகம் வெளி​யீட்டு நிகழ்ச்சி எழும்​பூரில் நடந்​தது. இந்​நிகழ்ச்​சிக்கு பாமக தலை​வர் அன்​புமணி தலைமை தாங்​கி, ‘தி​முக அரசின் பொய் தொழில் முதலீடு​கள்’ என்ற ஆவண புத்​தகத்தை வெளி​யிட்​டார்.

    இந்​நிகழ்ச்​சி​யில் அன்​புமணி பேசி​ய​தாவது: தமிழகத்​தில் ரூ.11 லட்​சத்து 32 ஆயிரம் கோடி தொழில் முதலீடு​கள் நடந்​திருக்​கிறது என்​றும், அதன்​மூலம் 34 லட்​சம் பேருக்கு வேலை​வாய்ப்பு கிடைத்​திருக்​கிறது என்​றும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், தொழில்​துறை அமைச்​சர், நிதி​யமைச்​சர் ஆகியோர் தொடர்ந்து ஒரு பொய்​யைச் சொல்லி வரு​கிறார்​கள்.

    அது பொய் என்று இந்த ஆவணம் மூலம் நிரூபித்​திருக்​கிறோம். குறிப்​பாக, 2025 செப்​டம்​பர் மாதம் வரை ரூ.11,32,575 கோடி​யில் 1,059 புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​திடப்​பட்​ட​தாக​வும், இதன்​மூலம், 34,02,998 வேலை​வாய்ப்​பு​கள் கிடைக்​கும் என அரசு தரப்​பில் கூறப்​படுள்​ளது. அதாவது, 2021-22-ம் ஆண்​டில் ரூ.68,405 கோடி மதிப்​பீட்​டில் 130 புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​திடப்​பட்​டன.

    அவற்​றில் ரூ.10,000 கோடி மட்​டுமே முதலீடு​கள்வந்​திருப்​ப​தாக உத்​தேச​மாக கணக்​கிடப்​பட்​டுள்​ளது. அதே​போல், 2022-23-ம் நிதி​யாண்​டில் ரூ.1.67 லட்​சம் கோடி​யில் 86 புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தான நிலை​யில், ரூ.7 ஆயிரம் கோடிக்​கும் குறை​வாகவே முதலீடு​கள் வந்​துள்​ளன.

    2024 ஜனவரி​யில் சென்​னை​யில் நடந்த உலக முதலீட்​டாளர்​கள் மாநாட்​டில் ரூ.6,64,180 கோடி மதிப்​பீட்​டில் 631 புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் போடப்​பட்​டன. ஆனால், இதில் 600-க்​கும் மேற்​பட்ட நிறு​வனங்​கள் இது​வரை முதலீடு செய்​ய​வில்​லை.

    மேலும், 2024-25-ம் ஆண்​டில் ரூ.39,549 கோடிக்கு புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் போடப்​பட்​டு, இது​வரை ஒன்​றுகூட செயல்​பாட்டுக்கு வரவில்​லை. 2025 ஏப்​ரல் முதல் தற்​போது​வரை ரூ.1.18 லட்​சம் கோடிக்கு 166 புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெ ழுத்​தாகி உள்​ளன. இதில் ஒன்​றுகூட செயல்​வடிவம் பெற​வில்​லை.

    முதல்​வர் ஸ்டா​லின் 7 நாடு​களுக்​குப் பயணம் மேற்​கொண்​டு, ரூ.34,014 கோடிக்கு 66 புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​களில் கையெழுத்​திட்​டார். ஆனால், இது​வரை ஒரு பைசா முதலீடு​கூட வரவில்​லை. தமிழகத்​தில் கங்​கை​கொண்​டானில் தொழில் தொடங்க கையெழுத்​திட்ட நிறு​வனம் ஒருசில நாட்​களில் ஆந்​தி​ரா​வுக்​குச் சென்​றது ஏன்? அமெரிக்​கா​வின் கூகுள் நிறு​வன தலைமை செயல் அதி​காரி சுந்​தர் பிச்சை தமிழகத்​தைச் சேர்ந்​தவர். அந்த நிறுவனம் தமிழகத்​தில் முதலீடு செய்​யாமல், ஆந்​தி​ரா​வுக்​குச் சென்​றது ஏன்? எல்​லா​வற்​றுக்​கும் ஊழல்​தான் காரணம்.

    இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅடுத்தடுத்து விலகும் முன்னாள் எம்எல்ஏக்கள்! – இருப்பைத் தொலைக்கிறதா புதுச்சேரி அதிமுக?
    Next Article விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்த வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்
    Editor TN Talks

    Related Posts

    காது குத்தும் விழா VS மொட்டை அடிக்கும் விழா!. இபிஎஸுக்கு திமுக பதிலடி!

    February 18, 2026

    தவெகவில் வேட்பாளர் லிஸ்ட் ரெடி!. டுவிஸ்ட் அடிக்கும் 30 பேர்!. விஜய்க்கு ஷாக்!

    February 18, 2026

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆன்லைனில் வாடகை வீடு தேடுகிறீர்களா? சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி பணத்தை இழந்த மருத்துவர்!. 

    ஐசிசி டி20 தரவரிசை!. டாப் 10ல் நுழைந்த இஷான் கிஷன்!. அசைக்க முடியாத முதலிடம்!

    மாநிலங்களவை தேர்தல்!. காங்கிரஸுக்கு மேலும் ஒரு சீட்!. திமுகவின் வியூகம் என்ன?

    சென்னை மாநகராட்சி பட்ஜெட்!. முக்கிய அம்சங்கள் என்ன?

    மாநில சுயாட்சிக்காக அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் வரவேண்டும்!. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

    Trending Posts

    தவெக-வுக்கு நோ!. திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்?. EPS, KAS-க்கு ஷாக்!. 

    February 18, 2026

    ஆன்லைனில் வாடகை வீடு தேடுகிறீர்களா? சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி பணத்தை இழந்த மருத்துவர்!. 

    February 18, 2026

    மாநிலங்களவை தேர்தல்!. காங்கிரஸுக்கு மேலும் ஒரு சீட்!. திமுகவின் வியூகம் என்ன?

    February 18, 2026

    விஸ்வரூபம் எடுத்த 7.5% இட ஒதுக்கீடு; ஆதாரத்தை திமுக காட்ட முடியுமா?. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    February 18, 2026

    ஐசிசி டி20 தரவரிசை!. டாப் 10ல் நுழைந்த இஷான் கிஷன்!. அசைக்க முடியாத முதலிடம்!

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.