Close Menu
    What's Hot

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்த வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்
    தமிழ்நாடு

    விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்த வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 20, 2025Updated:November 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Udhayanidhi Stalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விளை​யாட்​டுத் துறை​யில் இந்​தி​யா​வில் முதல் மாநில​மாக தமிழ்​நாட்டை உயர்த்​து​வதே நமது இலக்​காக இருக்க வேண்​டும் என்று துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தெரி​வித்​துள்​ளார். வண்​டலூர் அருகே மேலக்​கோட்​டையூரில் உள்ள தமிழ்​நாடு உடற்​ப​யிற்சி மற்​றும் விளை​யாட்டு பல்​கலைக்​கழக வளாகத்​தில் ரூ.5 கோடி மதிப்​பில் சர்​வ​தேச தரம் வாய்ந்த நீச்​சல் குளம் கட்​டப்​பட்​டுள்​ளது.

    அதே​போன்று அதே வளாகத்​தில் ரூ.2 கோடி மதிப்​பில் மேஜைப்​பந்து விளை​யாட்​டுக்​கான முதன்மை நிலை மையம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. இவற்​றுக்​கான திறப்பு விழா  நடை​பெற்​றது. விழாவுக்கு விளை​யாட்டு மற்​றும் இளைஞர் நலத்​துறை செய​லா​ளர் அதுல்ய மிஸ்ரா தலைமை தாங்​கி​னார்.

    இந்த நிகழ்ச்​சி​யில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கலந்து கொண்டு நீச்​சல் குளம் மற்​றும் மேஜைப்​பந்து முதன்மை நிலை மையம் ஆகிய​வற்றை திறந்து வைத்​தார். இதைத் தொடர்ந்து வி.ஐ.டி. பல்​கலைக்​கழக வளாகத்​தில் பேரூ​ராட்​சி, நகராட்​சி, மாநக​ராட்​சிகளில் உள்ள பள்​ளி, கல்​லூரி மாணவர்​களுக்கு விளை​யாட்டு உபகரணங்​கள் வழங்​கும் நிகழ்ச்சி நடை​பெற்​றது.

    இதில் கலந்து கொண்டு துணை முதல்​வர் உதயநிதி தாம்​பரம் மாநக​ராட்​சி, மது​ராந்​தகம், செங்​கல்​பட்​டு, மாமல்​லபுரம் நகராட்​சி, திருப்​போரூர், திருக்​கழுகுன்​றம் உள்​ளிட்ட பேரூ​ராட்​சிகளின் மாணவ, மாண​வியருக்கு விளை​யாட்டு உபகரணங்​களை வழங்​கி​னார்.

    அப்​போது அவர் பேசி​ய​தாவது: சாதி, மதம், இனம், மொழி, ஈகோ ஆகிய​வற்றை எல்​லாம் தாண்டி நம்மை இணைப்​பது இந்த விளை​யாட்டு ஒன்​று​தான். இதில் சாதித்​தால் நமது மாநிலத்​துக்​கும், நாட்​டுக்​கும் பெருமை சேர்ப்​ப​தோடு, உங்​களுக்​கும் எதிர்​கால வாழ்க்​கைக்கு வளம் சேர்க்​கும். ஏனெனில் நமது அரசு இந்​தி​யா​விலேயே முதன் முறை​யாக மாநில அரசு வேலைகளில் 3 சதவீத இட ஒதுக்​கீட்டை வழங்​கு​கிறது.

    இதன் மூலம் கடந்த ஆண்டு 100 பேருக்கு அரசு வேலை கிடைத்​துள்​ளது. இந்த ஆண்​டும் 100 பேருக்கு கிடைக்க உள்​ளது. உங்களுக்கு அனைத்து விதத்திலும் இந்த அரசு துணை நிற்கும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

    இந்த நிகழ்ச்​சி​யில், தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யத்​தின் உறுப்​பினர் செயலர் ஜெ.மேக​நாதரெட்​டி, அமைச்​சர் தா.மோ.அன்​பரசன், செங்கை ஆட்​சி​யர் சினே​கா, தாம்​பரம் மாநக​ராட்சி ஆணை​யர் பாலச்​சந்​தர், எம்​எல்​ஏக்​கள் எஸ்​.ஆர். ராஜா, இ.கருணாநி​தி, வரலட்​சுமி, உள்​ளாட்சி பிர​தி​நிதி​கள் கலந்து கொண்டனர்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக அரசின் பொய் தொழில் முதலீடுகள்: ஆவண புத்தகத்தை வெளியிட்டார் அன்புமணி
    Next Article ஆளும் கட்சிக்கும் ஆண்ட கட்சிக்கும் சவால் விடும் தேமுதிக – பிரேமலதா பிரகடனம்
    Editor TN Talks

    Related Posts

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    July 5, 2026

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    July 5, 2026

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    மீண்டும் கேப்டன் பதவியில் பாபர் ஆசம்! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிரடி முடிவு!

    டெல்லியில் விமானப் போக்குவரத்து பாதிப்பு!. கனமழையால் திருப்பிவிடப்பட்ட 15 விமானங்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.