பாஜக தலைமை மீது அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாஜக, அதிமுக கூட்டணியை உறுதி செய்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

டெல்லியில் அமித்ஷா வீட்டில் பாஜக நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலையை தவிர்த்து மற்ற 9 பேரும் பங்கேற்று ஆலோசனை நடத்தினர். இதற்கு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்ததால் பாஜக கூட்டணியில் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த சூழலில் மாநில பொறுப்பில் இருந்து விலகி 4 மாதங்களாக எந்த ஒரு பொறுப்பிலும் இல்லாத அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவருக்கு பாஜக எந்தவித பொறுப்பும் தராததால் தன்னால் அரசியலில் துடிப்புடன் செயல்பட முடியவில்லை அண்ணாமலை கருதுவதாக கூறப்படுகிறது.

மாநிலத் தலைமைப் பொறுப்பில் இருப்போர் சுதந்திரமாக செயல்பட்டால் மட்டுமே தேசியத் தலைமை எதிர்பார்க்கும் வெற்றியை பெற முடியும் என்பதே அண்ணாமலை நினைப்பதாகவும், நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி தமிழகத்தில் 20 சதவீதத்தை எட்ட தமிழக பாஜகவின் அதிரடி வியூகமும் , செயல்பாடுமே காரணம் என அண்ணாமலை நம்பிக்கை தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், கட்சியில் உள்ள சில மேலிடப் பொறுப்பாளர்களைப் போல சில மத்திய அமைச்சர்கள் தமிழக பாஜகவில் தேவையற்ற தலையிடுவதாக அண்ணாமலை கருத்து தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் திமுகவை கடுமையாக எதிர்க்கும் எதிர்க்கட்சி வரிசையில் பாஜகவே முதலிடத்தில் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அண்ணாமலையிடம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திமுக எதிர்ப்பை வலுவாக முன்வைக்க பாஜகவில் உரிய பொறுப்பை தனக்கு வழங்க வேண்டும் என்றும் அண்ணாமலை எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், பாஜகவில் தேசியத் தலைவர் அறிவிக்கப்படும்போது அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு வழங்க தேசியத் தலைமை திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அப்படி பாஜக தலைமை புதிய பொறுப்பை அண்ணாமலைக்கு கொடுத்தால் அவரின் செயல்பாடு மீண்டும் அதிரடி பாணிக்கு திரும்பும் என அண்ணாமலை ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version