தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம் மேற்கொண்டது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதிமுகவில் ஏற்பட்ட விரிசலால் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் அடுத்தடுத்து டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினர். பாஜக கூட்டணியில் அதிமுக தேர்தலை சந்திக்கும் என ஏற்கெனவே அறிவித்த நிலையில் சேலம் நெடுஞ்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து விட்டு திரும்பிய நிலையில் எடப்பாடி பழனிசாமியை நயினார் சந்தித்து அக்டோபர் ஒன்றில் தொடங்கவுள்ள பரப்புரை பயணத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த சூழலில் இன்று மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றுள்ளார். அங்கு பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவை சந்திக்க திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள சுற்றுப் பயணம் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது குறித்து பாஜகவின் தேசியத் தலைவர்களுடன் நயினார் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.