நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும் என முன்னால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நான் முதல்வன் தொடர்பான இணையப் பக்கங்களின் பெயரை மாற்றியிருப்பது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், நீங்கள், நான்முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம்.
ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன எனக் கூறியுள்ளார்.
மேலும், கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் நான் முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும் எனப் பதிவில் தெரிவித்துள்ளார்.
