உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக தலைவர் ராமதாஸை சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய சிகிச்சை நிபுனர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் உள்ள ராமதாஸை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். அவருடன் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதேபோல் அப்போலோ மருத்துவமனையில் உடல நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் வைகோவையும் முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version