முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப இன்னும் ஆறு அமாவாசைகள் தான் உள்ளதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிழக்கு மேற்கு ஒன்றிய மற்றும் நகர கழகம் சார்பில் பூத்கள் வாரியாக வாட்ஸ் அப் குழுக்கள் அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், தமிழக மக்கள் திமுக ஆட்சியினால் அவதிப்பட்டு வரும் நிலையில் இந்த கொடுங்கோல் ஆட்சி மாறவேண்டுமானால் அதிமுக தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஏக மனதாக பொதுமக்களும், தாய்மார்களும் தீர்மானித்து விட்டனர். ஸ்டாலின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப இன்னும் ஆறு அமாவாசைகள் உள்ளன.

2026ல் எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமைவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என பேசினார்.

Share.
Leave A Reply

Exit mobile version