Close Menu
    What's Hot

    குழந்தைகளை தாக்கும் புதிய கோவிட் வைரஸ்!. இந்தியாவிற்கு ஆபத்து?. அறிகுறிகள் என்ன?

    அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்?. பியூஷ் கோயல் பதில்!

    பெரம்பூர் – திருச்சி கிழக்கு!. விஜய் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குளறுபடி?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»தேமுதிக கூட்டணி யாருடன் – லிஸ்டில் திமுக, அதிமுக, தவெக?
    அரசியல்

    தேமுதிக கூட்டணி யாருடன் – லிஸ்டில் திமுக, அதிமுக, தவெக?

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 10, 2026Updated:January 10, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    New Project 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடலூரில் நடந்த தேமுதிக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் யாருடன் கூட்டணி என்பதை தெரிவிக்கமால சூசகமாக கூட்டணி முடிவு எடுத்துவிட்டதாக கூறியுள்ளார்.

    தொண்டர்களிடையே பேசிய அவர், “தமிழ்நாட்டு மக்களை தங்க தட்டில் வைத்து தாலாட்ட வேண்டும் என்றவர் கேப்டன். பெண்களை கண்களாக கண்ணியமுடன் பார்த்தவர் கேப்டன் விஜயகாந்த். கோயம்பேட்டில் தலைவர் புதைக்கப்படவில்லை. அவர் விதைக்கப்பட்டிருக்கிறார். இந்த மாநாட்டுக்கு தமிழத்தில் இருந்து இத்தனை பேர் வந்து இருக்கிறீர்கள். வேறெந்த கட்சியில் இப்படி நடக்குமா? அவங்க எல்லாரும் காசு கொடுக்கணும், சோறு கொடுக்கணும், வேட்டி, சேலை கொடுக்கணும். ஆனால், நீங்க அன்புக்காக இங்க வந்து இருக்கீங்க.

    ஏளனமாக பேசுவதும், தரைகுறைவாக பேசுவதும் எந்த கொம்பனாக இருந்தாலும் தேமுதிக தொண்டர்கள் பதிலடி கொடுப்பார்கள். தேமுதிகவை பார்த்து யாராவது தப்பா பேசனா அந்த கடவுள் தொண்டர்கள் மூலம் பதிலடி கொடுப்பார்.

    தேர்தல் வந்தால் எவ்வளவு சீட், எத்தனை பேரம் என்று சொல்கிறீர்களே? ஆமாம், நான் பேசுகிறேன். எங்கள் நிர்வாகிகள் தொண்டர்களிடம் நான் பேசுவேன். அவர்கள் கை காட்டும் கட்சியுடனே எங்கள் கூட்டணி. தேமுதிக நிர்வாகிகளிடமே நான் கூட்டணி பற்றி பேசுகிறேன். வேறு எவரிடமும் கூட்டணி குறித்து பேசுவதில்லை.

    அந்தந்த மாவட்ட நிர்வாகிகளின் விருப்பப்படியே தேமுதிக தலைமையான நான் முடிவெடுக்கிறேன். கூட்டணி குறித்து மாவட்ட நிர்வாகிகள் சொன்னது என்னை தவிர தேமுதிகவில் யாருக்கும் எதுவும் தெரியாது. இந்த முறை தேமுதிக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. தேமுதிக கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். தேமுதிகவை வைத்து பயன்படுத்துப்பீங்க. ஆனால், தேமுதிகவுக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்க மாட்டீங்க. கூட்டணி தர்மத்தை மதிக்கும் ஒரே கட்சி தேமுதிக.

    மகனாக இருந்தாலும் கட்சியின் ரகசியங்களை என்றுமே சொன்னது இல்லை. யாருடன் கூட்டணி என்ற முடிவை எடுத்து விட்டாச்சு. ஆனால், அதை இந்த மாநாட்டில் அறிவிக்க வேண்டுமா? இன்றுவரை எந்த கட்சியும் கூட்டணி அறிவிக்கவில்லை என்பதால் நாமும் சிந்தித்து ஆலோசித்து கூட்டணி குறித்து அறிவிப்போம்” என சூசமாக கூட்டணி குறித்து பேசியுள்ளார்.

    ADMK dmdk dmdk alliance DMK premalatha vijayakanth TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய்யின் பிரச்சார வாகனத்தை அங்குலம் அங்குலமாக சோதனையிட்ட அதிகாரிகள்!. ஓட்டுநரிடம் தீவிர விசாரணை!. 
    Next Article தர்மம் தான் ஜெயிக்கும்; ஆனா லேட்டா ஜெயிக்கும்!. விஜய் வைரல் வீடியோ!
    Editor TN Talks

    Related Posts

    அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்?. பியூஷ் கோயல் பதில்!

    April 3, 2026

    பெரம்பூர் – திருச்சி கிழக்கு!. விஜய் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குளறுபடி?

    April 3, 2026

    இந்தியாவின் 3வது அணு ஆயுத அசுரன்!. எதிரிகளை அதிரவைக்கும் ஐஎன்எஸ் அரிதமான்! கடற்படையில் இணைப்பு!

    April 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குழந்தைகளை தாக்கும் புதிய கோவிட் வைரஸ்!. இந்தியாவிற்கு ஆபத்து?. அறிகுறிகள் என்ன?

    அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்?. பியூஷ் கோயல் பதில்!

    பெரம்பூர் – திருச்சி கிழக்கு!. விஜய் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குளறுபடி?

    மகளிா் இடஒதுக்கீடு!. மீண்டும் ஏப்.16ல் கூடும் நாடாளுமன்றம்!. கூடுதலாக 3 நாள் நடத்த திட்டம்!.

    இந்தியாவின் 3வது அணு ஆயுத அசுரன்!. எதிரிகளை அதிரவைக்கும் ஐஎன்எஸ் அரிதமான்! கடற்படையில் இணைப்பு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.