சென்னையில் இன்று நடக்கும் பாமக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அன்புமணி விடுத்த அழைப்பை திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்து விட்டன.
சென்னை எழும்பூரில் அன்புமணி தலைமையில் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி பாமக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சாதிவாரி கணக்கெடுப்பு , வன்னியர்களுக்கு 15 சதவீத தனி இட ஒதுக்கீடு என தமிழக அரசை வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க திமுக கூட்டணி கட்சிகளுக்கு பாமக சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது
திமுக தவிர்த்து , திமுக கூட்டணியில் உள்ள காங். , இடதுசாரிகள் , விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அந்த கட்சிகள் அனைத்தும் அன்புமணியின் போராட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளன.
திமுகவுடன் விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்க உள்ள நிலையில், அன்புமணியின் போராட்டத்தில் பங்கேற்றால் கூட்டணியில் குழப்பம் ஏற்படும் என்பதால் அக்கட்சிகள் புறக்கணித்துள்ளன.
