திமுகவில் 2 கோடி உறுப்பினர்கள் உள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

திமுகவை மேலும் பலப்படுத்தும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை தொடங்கியுள்ளது திமுக.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்கள் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில் திமுக தேர்தல் பணிகளை விரைந்து முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் நடந்து முடிந்த பொதுக்குழுவில் திமுகவில் உறுப்பினர்களை அதிகரிப்பதற்காக நடவடிக்கையை மேற்கொள்ள ஓரணியில் தமிழ்நாடு என்று உறுப்பினர் சேர்க்கை தொடங்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

அந்த வகையில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் குறைந்தபட்சம் 30 சதவீதம் வாக்காளர்களை திமுக உறுப்பினராக சேர்க்க இலக்கை முதலமைச்சர் அறிவித்தார்.

மேலும், தமிழ்நாடு முழுவதும் வரும் 20 ம் தேதி முதல் திமுக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை தொடங்க உள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும் திமுக உறுப்பினராக யார் யார் உள்ளனர் என்ற விவரங்களை கேட்டு அதன் அடிப்படையில் புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை தொடங்க திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

மேலும், திமுக அரசின் திட்டங்களையும் திமுக நடத்தியுள்ள போராட்டங்களையும் மக்களிடம் விரிவாக விளக்கி புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை தொடங்க திமுக தலைமை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜூன் 20 ம் தேதி முதல் ஜூலை 31 ம் தேதிக்குள் புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை முடித்து விவர அறிக்கையை திமுக தலைமைக்கு வழங்க உத்தரவு. மேலும், சட்டமன்றத் தேர்தலுக்கு 10 மாதங்களே உள்ளதால் உறுப்பினர் சேர்க்கையை மினி தேர்தல் பிரச்சாரமாக கருதி களத்தில் பணியை மேற்கொள்ள திமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version