ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் நாளை தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

ஜூலை 1-ந் தேதி சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் முறைப்படி ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை முதலமைச்சர் அறிவிக்க உள்ளார். அடுத்து 38 மாவட்டங்களிலும் பொறுப்பு அமைச்சர்கள்/மாவட்டச் செயலாளர்கள் செய்தியாளர் சந்திப்பை நடத்துவார்கள். ஜுலை 2-ந் தேதி 76 திமுக மாவட்டங்களிலும் ஓரணியில் தமிழ்நாடு கூட்டங்கள் நடத்தப்படும்.

ஜூலை 3-ந் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடுவீடாகச் சென்று மக்களை சந்திப்பார்கள். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மூத்த நிர்வாகிகள் எல்லாரும் அவரவர் சொந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் செல்ல உள்ளனர். திமுக செயல்வீரர்கள் ஒருவர் விடாமல் வீட்டுக்கு வீடு சென்று பரப்புரைச் செய்வதை உறுதிசெய்ய அறிவுறுத்தப்பட்டள்ளது.

வீட்டுக்கு வீடு பரப்புரை– ‘டோர் டூ டோர்’! என்ற அடிப்படையில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குச்சாவடி முகவர், பூத் டிஜிட்டல் ஏஜெண்ட், ஒரு பெண், ஒரு இளைஞர், BLC உறுப்பினர் கொண்ட குழுவுடன் நிர்வாகிகளும் செயல்வீரர்களும் இணைந்துசெல்ல உள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதிக்கு பிறகு, தமிழ்நாடு முழுக்க ஓரணியில் தமிழ்நாடு நிறைவு விழாக்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version