அமைச்சர் சேகர்பாபு மீது சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த திமுக எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தது முதல் சேகர்பாபுவுக்கு ஏறுமுகம்தான். திமுகவில் சேர்ந்தவுடன் அக்கட்சித் தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவராக மாறினார் சேகர்பாபு. கட்சித் தலைமைக்கு ஆலோசனைகளை சொல்லுமளவுக்கு தனது செல்வாக்கை மாற்றிக் கொண்டார்.

துணை முதலமைச்சர் உதயநிதியின் கருத்துக்கே சேகர்பாபு சில நேரத்தில் ஆட்சேபம் தெரிவித்ததாகவும், இது ஸ்டாலின் கவனத்திற்கு சென்றபோது சேகர்பாபு விசயத்தில் தலையிட வேண்டாமென உதயநிதியை ஸ்டாலின் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுவதுண்டு. இதுபோல திமுகவில் வடமாவட்டங்களில் செல்வாக்குமிக்கவராக மாறியுள்ள சேகர்பாபுவை கேட்டுத்தான் திமுகவில் சில முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

இதுபோல கட்சித் தலைமையிடம் சேகர்பாபுவுக்கு இருக்கும் செல்வாக்கால் அவரை கேட்டே அனைத்து முடிவுகளையும் சென்னை மற்றும் அண்டை மாவட்ட திமுக எம்எல்ஏக்கள் எடுத்து வருகின்றனர். அப்படி கேட்கவில்லையெனில், அவர்களை அழைத்து சேகர்பாபு கண்டிப்பதாகவும், இதற்கு பயந்து முன்கூட்டியே அனைத்து விசயங்களையும்  எம்எல்ஏக்கள் தெரிவித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

சேகர்பாபு சொல்வதை கேட்கவில்லையெனில், அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களுக்கு சீட் கிடைப்பதை தடுத்து விடுவார் என்ற பயமே இதற்கு காரணமாகும். மாநிலத் தலைநகர் என்பதால், சென்னை மீது எப்போதும் திமுக தலைமை தனி கவனம் செலுத்துவது வாடிக்கையாகும். ஒருவேளை திமுக தலைமை கேட்டுக் கொண்டதாலேயே சேகர்பாபு இப்படி செயல்பட வாய்ப்பு இருப்பதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னையில் கட்சிக்கான செலவை தான் பார்த்து கொள்வதாக சேகர்பாபு கூறுவதால், கட்சி நிதிக்கு கூட பணத்தை திரட்ட முடியாத நிலையில் உள்ள எம்எல்ஏக்களும், திமுக நிர்வாகிகளும். நிதி திரட்டவில்லையேல், தேர்தலுக்கு சொந்த பணத்தை செலவழிக்க வேண்டிய நிலை வந்தாலும் வரக்கூடும் என்ற கலக்கத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version