கரூர் வேலுச்சாமிபுரத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக சர்ச்சைகள் பரவி வரும் சூழலில் அங்கு என்ன நடந்தது என்பது குறித்து அமுதா ஐஏஎஸ் விளக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்த தகவலில், கரூர் பிரச்சாரத்தின் போது ஆம்புலன்ஸ் ஏன் வந்தது, மின்சாரம் நிறுத்தப்பட்டதா, அங்கு என்ன நடந்தது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், விஜய் பிரச்சாரத்தில் முதலில் கேட்ட இடத்தில் அமராவதி ஆற்றுப்பாலமும், பெட்ரோல் பங்கும் உள்ளது. 2வது இடத்தில் 5000 பேர் மட்டும் தான் திர முடியும் என்பதால் வேலுச்சாமிபுரம் கொடுக்கப்பட்டது. தவெக கூட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், தவெகவினர் தான் ஜென்செட் கொட்டகைக்குள் புகுந்தனர். அப்போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அமைப்பாளர்களே ஜெனரேட்டர் ஆஃப் செய்யப்பட்டது. இதனால் ஃபோகஸ் லைட் ஆஃப் ஆனது. ஆனால் மற்ற இடங்களில் லைட் எரிந்தது.
விஜய் பேசும்போது மின் இணைப்பு துண்டிக்கப்படவில்லை. ஆன்புலன்ஸ் தேவையில்லாமல் நுழைந்ததாக கூறப்படுகிறது. தவெக சார்பில் 7 ஆம்புலன்ஸ்கள் இருந்தன. 108 ஆம்புலன்ஸ் 6 இருந்தது. இரவோடு இரவாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது தொடர்பாக சந்தேகம் எழுந்தது. நல்லெண்ணத்தின் அடிப்படையில் பல்வேறு அரசு மருத்துவமனை மருத்துவர்களை வைத்து விரைந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது என விளக்கம் அளித்தனர்.