சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காக ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்ட ரூ.4,000 கோடி அம்போ ஆகி விட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் அடித்துள்ளார்.
டிட்வா புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, சென்னை மற்றும், அண்டை மாவட்டங்களில் இடைவிடாமல் மழை பெய்தது.
இந்த மழையினால் சென்னையின் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. மழைநீர் வடிகால் பணிகள் நடந்த போதிலும் நகரின் பல பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதுதொடர்பான புகைப்படங்கள் பல்வேறு செய்தித் தாள்களில் வெளியாகின. இதை தனது எக்ஸ் பக்கத்தில் ஜெயக்குமார் பதிவேற்றியுள்ளார்.
சென்னை வடிகால் பணிக்காக ரூ.4,000 கோடி ஒதுக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, அந்த பணம் அம்போ ஆகி விட்டதாக ஜெயக்குமார் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
