Close Menu
    What's Hot

    10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.

    இந்தியாவுக்கு எதிரான தோல்வி!. கோபத்தில் டிவியை உடைக்கும் பாக்., ரசிகர்!. வீடியோ வைரல்!.

    “தகுதியற்றவரிடம் பொறுப்பு கொடுத்தால், நாட்டையே அழித்துவிடுவார்”!.  சோயிக் அக்தர் ஆத்திரம்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»அழுவது போல் நடித்த உத்தமரா இன்று அழுகையைப் பற்றிப் பேசுவது? – அன்பில் மகேஷ்
    அரசியல்

    அழுவது போல் நடித்த உத்தமரா இன்று அழுகையைப் பற்றிப் பேசுவது? – அன்பில் மகேஷ்

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    17430115 anbilmahesh
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அழுவது போல் நடித்த உத்தமரா இன்று அழுகையைப் பற்றிப் பேசுவது? என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ பொய்யாமொழி அறிக்கை வெளியிட்டுள்ளார் 

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “உயிரிழந்தவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் நம் தமிழ் உறவுகள்’’ என கரூர் துயரத்திற்கு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்ட வீடியோவை பார்த்துவிட்டுக் கதறியிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

    நாம் முதலமைச்சராக இருந்த போது தொலைக்காட்சியைப் பார்த்துத்தானே ஆட்சி செய்தோம். இப்போது இருக்கிற முதலமைச்சர் நேரில் போகிறாரே? என்ற விரக்தியில், இயலாமையில் உளற ஆரம்பித்திருக்கிறார்.

    கரூர் சம்பவத்திற்கு ஆணையத்தை அரசு அமைத்ததை Eyewash ஆணையம் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. இப்போது அமைக்கப்பட்டிருக்கும் நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தைதான் தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்த போது அமைத்தவர் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது பழனிசாமியின் Eye மூடியிருந்ததா? ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தவரும் எடப்பாடி பழனிசாமிதான். ஜெயலலிதாவின் மரணத்தை விசாரித்தது கூட Eyewash-தானா?

    சமூக ஊடகங்களில் எந்தமாதிரியான சதிக் கோட்பாட்டுக் கதைகள் பரவி வருகின்றன என்பது தெரியாதா? உங்கள் கட்சியின் ஐடி விங்கிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

    ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதும் இறந்த போதும் என்னவெல்லாம் நாடகம் ஆடினீர்கள்? பிறகு ஆர்.கே. நகர் தேர்தலில் இறந்த உங்களுடைய தலைவர் உடல் போன்ற சித்தரிக்கப்பட்ட பொம்மையை வைத்து பரப்புரை செய்தீர்கள். பொம்மையை வைத்து அரசியல் செய்த வரலாற்றை எழுதியவர்கள்தானே நீங்கள்

    இதுபோன்ற நாடகங்களை நடத்திப் பழக்கப்பட்ட உங்களுக்கு எல்லாமே போட்டோஷூட்டாகத் தெரியும். பிணங்களை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு உண்மையான அக்கறை வெளிப்படாது.

    அமைச்சர் ஒருவர் அழுவது போல நடிக்கத் தெரியாமல் மாட்டிக்கொண்டார் எனச் சொல்லியிருக்கிறார். இதே செப்டம்பர் 29-ம் தேதி 11 ஆண்டுகளுக்கு முன்பு அழுகாச்சியோடு ஓர் அமைச்சரவை பதவியேற்பு நாடகம் நடந்தது பழனிசாமிக்கு தெரியுமா? சொத்துக் குவிப்பு வழக்கில் 2014-ல் நீதிபதி குன்ஹா தீர்ப்பால் தண்டனை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தார். அதனால், பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை கண்ணீரோடு பதவியேற்றது. அப்போது அழுவது போல் நடித்த உத்தமரா இன்று அழுகையைப் பற்றிப் பேசுவது?” என கூறியுள்ளார்.

    Karur TVK tvk vijay
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகரூர் விபத்து குறித்து வதந்தி பரப்பியதாக 3 பேர் கைது! – தவெக, பாஜக நிர்வாகிகளிடம் விசாரணை
    Next Article கரூர் சம்பவத்தில் வதந்தி பரப்பியதாக பிரபல யூடியூபர் கைது
    Editor TN Talks

    Related Posts

    திருமாவை நெருக்கும் சில சிறுத்தைகள்..! திமுக போடும் மாஸ்டர் பிளான்!

    February 13, 2026

    ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டில் எடுபடாது; ஏற்கப்படாது…! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து..!

    February 13, 2026

    ஜெயலலிதா பிறந்தநாளில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!. EPS திட்டம்!.

    February 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.

    இந்தியாவுக்கு எதிரான தோல்வி!. கோபத்தில் டிவியை உடைக்கும் பாக்., ரசிகர்!. வீடியோ வைரல்!.

    “தகுதியற்றவரிடம் பொறுப்பு கொடுத்தால், நாட்டையே அழித்துவிடுவார்”!.  சோயிக் அக்தர் ஆத்திரம்!.

    மீனவர்கள் கைது!. கடிதம் எழுதுவதே போதும் என முதல்வர் எண்ணுகிறாரா?. விஜய் கேள்வி!

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    Trending Posts

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    February 16, 2026

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.

    February 16, 2026

    இந்தியாவுக்கு எதிரான தோல்வி!. கோபத்தில் டிவியை உடைக்கும் பாக்., ரசிகர்!. வீடியோ வைரல்!.

    February 16, 2026

    “தகுதியற்றவரிடம் பொறுப்பு கொடுத்தால், நாட்டையே அழித்துவிடுவார்”!.  சோயிக் அக்தர் ஆத்திரம்!.

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.