சுதந்திரப் போராட்ட தமிழ் வீரர் தீரன் சின்னமலையின் நம்பிக்கை தளபதியாக விளங்கிய சுதந்திரப் போராட்ட தமிழ் வீரரான பொல்லான் அவர்களின் திருஉருவச் சிலையை இன்று ஈரோட்டில் மு க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துள்ளார்
https://x.com/mkstalin/status/1993587901465296920?t=K-tNqevk1M2wSHo4pFwoJg&s=09
திருஉருவச் சிலையுடன் கூடிய அரங்கை திறந்து வைத்த மு க ஸ்டாலின், அந்த அரங்கில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி குறித்து நிறைய விஷயங்கள் பேசினார்.
மு க ஸ்டாலின் ஆளுநர் ஆர் என் ரவி குறித்து பேசியது :
தமிழ்நாட்டில் பாதுகாப்பு பிரச்சனை இருக்கிறது என்றும், தீவிரவாத நிலை இருப்பதாகவும், தமிழ்நாட்டில் தமிழ் மொழி வளர்ச்சி இல்லை என்றும் இங்கே அனைவரும் ஆங்கிலத்தை தான் கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆளுநர் ரவி அவர்கள் கூறியது மிகவும் கண்டனத்துக்குரியது என்று மு க ஸ்டாலின் அவர்கள் தனது உரையை ஆரம்பித்தார். இது பற்றி விரிவாக பேசிய மு க ஸ்டாலின்

“பாஜக ஆட்சியில் தான் சுற்றுலா சென்ற பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். பாஜக ஆட்சியில் தான் செங்கோட்டை அருகே குண்டுவெடித்தது. பாஜக ஆட்சியில் தான் இன்று மணிப்பூர் பற்றி எரிகிறது. ஆனால் அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என்று அவர் திமிரெடுத்து பேசியிருக்கிறார். அவரது திமிரை நாம் அடக்க வேண்டும், என்று மு க ஸ்டாலின் கோபத்துடன் பேசியிருக்கிறார்.
மேலும் பாஜகவுக்கு வாக்களிக்காத அனைவரையும் தீவிரவாதிகள் போல ஆளுநர் ரவி அவர்கள் சித்தரித்து பேசுவதாக மு க ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
மேலும், உலக வாய்ப்புகளுக்காக எங்களுடைய தமிழ் பசங்க அனைவரும் ஆங்கிலம் படிக்கிறார்கள். அப்படி படிப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை உங்களுக்கு எங்க எரியுது. தமிழ்மொழி பற்று பற்றி எங்களுக்கு நீங்கள் வகுப்பு எடுக்க வேண்டாம். அதில் பிஎச்டி பட்டம் வாங்கியவர்கள் நாங்கள்.எங்களுக்கு நீங்கள் இதை சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை”, என்றும் கூறியிருக்கிறார்.

மு க ஸ்டாலின் கொந்தளித்து பேசிய இந்த உரை தற்பொழுது சமூகவலைகளில் வைரலாகி வருகிறது.
