இந்தியாவுக்கு அதிக வரியை அமெரிக்கா விதிக்க பிரதமர் மோடி தான் காரணம் என திமுக எம்பி ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது அதிக வரி விதித்ததற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த சூழலில் அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பிரதமர் மோடிதான் காரணம் என ஆ.ராசா பேசியுள்ளார். அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பில் இருந்து மீள்வதற்கு மத்திய அரசு நிவாரண நடவடிக்கைகள் எடுக்கக் கோரி திருப்பூரில் திமுகவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் எம்பி ஆ.ராசா பங்கேற்று பேசினார். அப்போது, இந்தியாவை பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் விற்பதாக தெரிவித்துள்ளார். அப்படி அவர்கள் விற்கும் இந்தியாவை அம்பானியும், அதானியும் வாங்குவதாக குற்றம்சாட்டிய அவர் அமெரிக்கா இந்தியாவின் மீது 50 சதவீத வரியை விதிக்க இதுவும் ஒரு காரணம் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா மீதான வரி விதிப்பை டிரம்ப் போடவில்லை என்றும் வரியை விதிக்க சொன்னதே பிரதமர் மோடி தான் என்றும் ஆ.ராசா காட்டமாக பேசியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version