விஜய்யின் தவெகவில் சேர்ந்தது ஏன் என்பது குறித்து நாஞ்சித் சம்பத் பேட்டியளித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முன்னிலையில் திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இன்று தவெக-வில் தன்னை இணைத்துக்கொண்டார்.. தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களை சந்தித்து நீயும் முதல்வராகலாம் என்ற புத்தகத்தை வழங்கி கட்சியில் இணைந்தேன். 6 ஆண்டு காலம் எந்த அரசியல் கட்சியிலும் என்னை இணைத்துக் கொள்ளாமல் திராவிட இயக்கத்தில் சொற்பொழிவாளர் என்று சொல்லி பெரியார்,  அண்ணா அவர்களின் லட்சியங்களை பேசி வந்தேன். இந்நிலையில், இன்று தவெக வில் இணைத்துக் கொண்டு நாடு முழுக்க கட்சியின் பிரச்சாளனாக  பவனி வர விஜய் என்னை அனுமதித்துள்ளார்.

என்னை பார்த்ததும் தலைவர் விஜய் அவர்கள்  நான் உங்கள் Fan (விசிறி) என்று தெரிவித்தார்,  அவர் சொன்னதும் நான் மெய்சிலிர்த்துப் போனேன் இப்படி ஒரு அங்கீகாரத்தை அவர் வழங்குவார் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
கரூர் துயரத்திற்கு சிபிஐ விசாரணைக்கான உத்தரவை உச்சநீதிமன்றம் வழங்கியபோது ஊடகங்களுக்கு பேட்டி அளித்த தான் இது தவெகவின் வெற்றி என்று குறிப்பிட்டிருந்தேன், அந்த நிமிடத்திலிருந்து அறிவாலயத்தில் இருந்து காது கொடுத்து கேட்க முடியாத அளவில் என்னை வசை பாடிக் கொண்டிருந்தார்கள். தொடர்ந்து 5 நாட்கள் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணத்திற்கு ஒப்புக்கொண்ட நிகழ்ச்சியை ரத்து செய்தார்கள். தொடர்ந்து எனக்கான நிகழ்ச்சிகளை நிராகரித்தார்கள்.
அதன் பிறகு உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை கொண்டாட ஒரு மாதத்திற்கு முன்பாகவே தன்னிடம் தேதியை பெற்றிருந்த அமைச்சர் சேகர் பாபுவின் அழைப்பை ஏற்று, கடந்த 28ஆம் தேதி நிகழ்ச்சியில் நான் பேசினேன். அந்த நிகழ்ச்சியிலும் கரு பழனியப்பன் என்னை நக்கலும் நையாண்டியும் செய்தார். அதனைத் தொடர்ந்து பலர் என்னை மேடைகளில் வசை பாடினார்கள். நான் மனதளவில் உடைந்து போனேன்,
மிரட்டல்கள் வந்தன: தந்தி டிவியின் மக்கள் மன்றத்தில் விஜய் சரியான திசையில் பயணிக்கிறார் என்ற தலைப்பில் நான் உரையாற்றினேன். அந்த நிமிடம் முதல் எனக்கு பல்வேறு மிரட்டல்கள் வந்தன. கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்புகள் விஜய் அவர்களை சந்தித்த பிறகு புதிதாய் பிறந்தது போல இருந்தது என்று அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, செய்தியாளர்கள்  எழுப்பிய கேள்விகளும் அதற்கு சம்பத் அளித்த பதில்களும்:
கேள்வி: திராவிட சித்தாந்தம் இல்லாத ஒரு புதிய கட்சி அந்தக் கட்சியில் உங்களது பயணம் எப்படி இருக்கும்?
பதில்: திராவிட இயக்க சித்தாந்தம் வழிகாட்டும் பெரியாரை தான் அவர் முன்னிறுத்துகிறார்.
கேள்வி:  இது உங்களுக்கு ஒரு பொன் மாலைப்பொழுதா?
பதில்: அதைவிட அதிகமான சொல் ஏதேனும்  இருந்தால் அதை நான் முன்னிறுத்துவேன்.
கேள்வி: திராவிட மேடைகளில் ஏற்பட்ட அவமானங்கள் தான் காரணமா அல்லது தலைவர் விஜய் பற்றி பேசிய பிறகு தான் இந்த அவமதிப்பு ஏற்பட்டதா?
பதில்: ஆறு ஆண்டுகள் எந்த கட்சியிலும் சேராமல் தான் நான் இயங்கி வந்தேன். தற்போது நான் இயங்க வேண்டும். ஆனால் என்னை முடக்கி வைத்திருந்தார்கள். இன்று நான் இயங்குவதற்கான வாய்ப்பை தலைவர் விஜய் வழங்கி உள்ளார்.
கேள்வி: திராவிடம் இல்லாத ஒரு கட்சியில் இணைந்தது எப்படி?
பதில்: தமிழகம் என்று இருப்பதே திராவிடம் தான். திராவிட கட்சியின் நீட்சியாகவே விஜய் அவர்களை பார்க்கிறேன்.
கேள்வி:  விஜய் என்ன மாற்றத்தை கொண்டு வருவார் என நினைக்கிறீர்கள்?
பதில்: விஜய் என்ன மாற்றத்தை கொண்டு வரப் போகிறார் என்பது அவர் அறிவிக்க உள்ள தேர்தல் அறிக்கை மூலம் தெரியும். அதே நேரத்தில் தமிழக அரசியல் வரலாற்றில் இலட்சக்கணக்கான இளைஞர்களை மூலதனமாக வைத்துள்ள இயக்கம். த வெ க  நிச்சயம்  இளைஞர்கள் மூலம் மாற்றத்தை அவர் கொண்டு வருவார் என நான் நம்புகிறேன்.
கேள்வி : புரிதல் இல்லாமல் இருப்பவர்களை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: அவர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் பாசறைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று தலைவர் விஜய் அவர்களிடம் தெரிவித்துள்ளேன்.
கேள்வி: எதை மையப்படுத்தி பேச வேண்டும் என்று நினைக்கிறீர்கள்
பெரியார் அம்பேத்கர் காமராசர், அஞ்சலையம்மாள், வேலுநாச்சியார்,  உள்ளிட்டவர்களை கொள்கை தலைவர்களாக விஜய் ஏற்றுக்கொண்டுள்ளார், அதோடு அறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆகியோரையும் அவர் முன்னிறுத்தி இருக்க கூடிய நிலையில் தமிழ்நாட்டில் எனக்கு பேசுவதற்கு நிறைய செய்திகளை அவர் வைத்துள்ளார் என்று அவர் குறிப்பிட்டார். கொள்கை தலைவர்களைப் பற்றி பேசினாலே போதும் அதோடு தமிழ்நாட்டின் பிரச்சினைகள் அதிகம் உள்ளது அனைத்தையும் த வெ க  எதிர்கொள்ளும் என்று பேசுவேன்.
கேள்வி: திருப்பரங்குன்றம் பிரச்சனை தொடர்பாக எந்த கருத்தையும் தலைவர் விஜய் பேசாமல் இருப்பது நெருடலாக இல்லையா உங்களுக்கு?
பதில்: திருப்பரங்குன்றம் விவகாரத்தை ஏன் பேசவில்லை என்று நான் அவரிடம் கேட்கவில்லை,  ஆனால் பேசாமல் இருப்பது ஒரு வகையில்  நல்லது.  திருப்பரங்குன்றத்தை வைத்துக்கொண்டு கலவர அரசியலுக்கு கை கால் முளைக்குமா என்று சிலர் எண்ணுகிறார்கள் எனவே ஒரு தரப்புக்கு ஆதரவாகவும் ஒரு தரப்புக்கு எதிராகவும் கருத்துக்கள் சொல்லாமல் இருப்பது தான் நல்லது.
கேள்வி: கடந்த மாதம் திராவிட வெற்றி கழகம் என்று மல்லை சத்யாவுடன் இணைந்து கட்சி  தொடங்கி வைத்துவிட்டு, அங்கு சேராமல் இங்கு சேர்ந்ததற்கு என்ன காரணம்?
பதில்: அது என்னுடைய தனிப்பட்ட விஷயம்
கேள்வி : திமுக,  அதிமுக,  பாஜக என பல்வேறு கட்சிகள் மீது தலைவர் விஜய் வைக்கும் விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: நான் திமுகவாகவே பிறந்து,  முதல் முதலில் மாணவர் திமுக அமைப்பை தொடங்கி பணியாற்றுனேன், ஆயுள் முழுவதும் திமுகவில் தான் பணியாற்ற வேண்டும் என்று நினைத்தேன் வைகோவுக்கு களங்கம் வரும்போது நான் தானாக திமுகவிலிருந்து வெளியேறினேன்.  அதன் பிறகு வைகோவின் தலைமையேற்ற 19 ஆண்டு காலம் பணியாற்றினேன்.  என்னுடைய இருப்பை அவர் செறித்துக் கொள்ளவில்லை அதனால் வெளியேறினேன், அந்த காலத்தில் என்னை கொலை செய்யும் அளவுக்கு திட்டங்கள் தீட்டப்பட்டன அப்போது நான் அதிமுகவிடும் அடைக்கலம் சேர்ந்தேன் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி தலைமையை நான் ஏற்றுக் கொள்ளவில்லை, 6 ஆண்டுகள் எந்த அரசியல் கட்சியிலும் இல்லாத நான் இன்று தவெகவை தேர்ந்தெடுத்துள்ளேன்.
கேள்வி: தவெக-வில் உங்களுக்கு என்ன பொறுப்பு வழங்கி இருக்கிறார்கள்?
பதில்: நான் பிரச்சாரம் செய்து வாழ்ந்தவன். அந்த பயணத்தையும் வாய்ப்பையும் எனக்கு தர வேண்டும் என்று என் தலைவர் விஜய் அவர்களிடம் கேட்டுள்ளேன்.
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version