இந்திய மற்றும் ரஷ்ய நட்புணர்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புதின் புதுடெல்லிக்கு வந்து இருக்கிறார். பல்வேறு ஒப்பந்தங்கள் இந்த சுற்றுப்பயணத்தில் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.
இன்று பிரதமர் மோடி ரஷ்ய மக்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தியை கூறியிருக்கிறார். அது என்னவென்றால் ரகசிய மக்களுக்கு இலவசமாக ஈ விசா தரப்போவதுதான். ஆம் ரஷ்ய மக்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள தேவைப்படும் E விசாவை எந்த ஒரு கட்டணமும் இன்றி இலவசமாக வழங்கப்போவதாக பிரதமர் மோடி கூறியிருக்கிறார். மேலும் இந்த விசாவிற்கு விண்ணப்பித்த அடுத்த 30 நாட்களுக்குள் விசா கிடைத்துவிடும் என்கிற உத்தரவாதத்தையும் கொடுத்திருக்கிறார். டூரிஸ்ட் விசா மற்றும் குரூப் டூரிஸ்ட் விசா என இரண்டும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக ரஷ்ய மக்கள் இந்தியாவுக்கு வருகை தருவது ஆண்டுக்கு ஆண்டு அதிகமாய் கொண்டு தான் போகிறது. சர்வே படி 2023 ஆம் ஆண்டு மொத்தமாக ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரஷ்ய மக்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கின்றனர். இது இதற்கு முந்தைய இரண்டு வருடங்களை விட அதிகம் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
அதேபோல ஒரு ரஷ்ய சுற்றுலா பயணி இந்தியாவிற்கு வந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டால் குறைந்தபட்சம் இந்திய ரூபாயில் 75 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 25 ஆயிரம் வரை குறைந்தபட்சம் செலவாகும். பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள இந்த சலுகை மூலம், தோராயமாக ஒரு லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வருகிறார்கள் என்று நினைத்துக் கொள்வோம்.
அதன்படி 750 கோடி முதல் 1250 கோடி ரூபாய் வரை அந்த மக்களின் சுற்றுலா பயண செலவின் மூலமாக இந்தியாவுக்கு வருவாய் உறுதி செய்யப்படும். இது வெறும் யூக கணக்கு தான் என்றாலும் நிச்சயமாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இந்த சலுகை மூலம் இந்தியாவுக்கு ஒரு நல்ல வருவாய் கிடைக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
