நாட்டில் இருந்து நக்ஸலிசம் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜகதால்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, டிசம்பர் 13, 2023 அன்று சத்தீஸ்கரில் பாஜக அரசு பதவியேற்ற அன்று நக்ஸலிசத்தை முழுமையாக ஒழிப்பதற்கான உறுதியான பிரச்சாரம் தொடங்கப்பட்டதாகவும்,
ஆகஸ்ட் 24, 2024 அன்றுதான், மார்ச் 31, 2026-க்குள் நக்ஸல் இல்லாத நாடாக மாற்றத் தீர்மானிக்கும் வகையில் இந்திய மாநிலங்களின் காவல்துறை தலைமை இயக்குநர்களின் கூட்டம் கூட்டப்பட்டதாகவும் தெரிவித்தார்.
ஆனால் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு முன்பாகவே, பாதுகாப்புப் படையினரின் வீரம், துணிச்சல், ஈடுஇணையற்ற தியாகத்தின் காரணமாக நாட்டில் இருந்து நக்ஸலிசம் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
நக்ஸலிச ஒழிப்பில், பாஜக அல்லாத பல அரசுகள் உதவியுள்ளதாகவும், ஆனால், சத்தீஸ்கரில் இருந்த முந்தைய காங்கிரஸ் அரசு எவ்வித உதவியும் அளிக்கவில்ல எனவும் குற்றம்சாட்டினார்.
