தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவீர்களா என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்லும் என ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஓபிஎஸ் இன் மகனும் அண்ணன் ரவீந்திரநாத் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போத பேசிய அவர், தொண்டர்கள் என்ன நினைக்கின்றார்களோ பொதுமக்கள் என்ன நினைக்கின்றார்களோ அதன்படி எடுத்த முடிவு தான் இது எங்களுடைய முடிவு என்ன என்பதை பண்ருட்டியார் தெளிவாக சொல்லிவிட்டார்
பின்னாடி என்ன நடக்கும் என்பதை நினைத்து நாங்கள் யாரும் அரசியலுக்கு வரவில்லை தமிழுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் என்ன நல்லது செய்ய முடியும் என்பதை நினைத்து தான் எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கினார் அதே வழியில் தான் புரட்சித்தலைவி அம்மா அவர்களும் வழி நடத்தினார்கள் இந்த இரண்டு தலைவர்களை நம்பி தான் இந்த இயக்கத்தின் தொண்டர்கள் கட்சியின் ஆணிவேராக நின்று கொண்டிருக்கின்றார்கள் ஆகவே எங்கள் தலைவர்களின் நோக்கம் என்னவோ அதன்படி எங்கள் பயணம் இருக்கும்
அதிமுகவை பாஜக அழிக்க நினைக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், யூகங்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார். தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் இருக்கின்றது. அந்த நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம் பொதுமக்களை சந்திப்பு பயணம் மேற்கொள்ள இருப்பதாக ஓபிஎஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்கள் அதன் வழியில் எங்கள் பயணம் இருக்கும் அதன்படி அரசியல் விளைவுகள் இருக்கும்.
ஓபிஎஸ் அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியே வருவதற்கு எடப்பாடி பழனிச்சாமி காரணமாக இருக்கின்றாரா என்ற கேள்விக்கு இதை பாஜகவிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என தெரிவித்தார். தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகியுள்ளது 2026 மக்கள் நல்ல முடிவை அறிவிப்பார்கள் என நம்புகின்றேன். தனிக்கட்சி நீங்கள் ஆரம்பிக்கப் போகிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்தவர் அதில் உண்மை இல்லை என தெரிவித்தார்.
த வெ க வில் இணைவீர்களா என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்லும் என தெரிவித்தார். இன்றைக்கு அதிமுக என்ன நிலையில் இருக்கின்றது என்பதை நான் சொல்வதை விட நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் மூலம் அனைவருக்கும் தெரியும் என்று அவர் கூறினார்.