Close Menu
    What's Hot

    தங்கம் விலை அதிரடி உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    “நானே வேண்டாம் என்று எழுதி கொடுத்துவிட்டேன்”!. அண்ணாமலை விளக்கம்!

    புதிய நீதிக்கட்சிக்கு பாஜக சீட் வழங்காதது ஏன்?. ஏ.சி.சண்முகம் விளக்கம்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»தனிக்கட்சியா? பாஜகவா? எம்ஜிஆர் நினைவு நாளில் முடிவை அறிவிக்கிறார் ஓபிஎஸ்!
    அரசியல்

    தனிக்கட்சியா? பாஜகவா? எம்ஜிஆர் நினைவு நாளில் முடிவை அறிவிக்கிறார் ஓபிஎஸ்!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 13, 2025Updated:December 13, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    opsss
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த முடிவை அறிவிப்பதற்காக டிசம்பர் 15-ம் தேதி நடைபெறவிருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர் உரிமை உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பின் சார்பில் பாஜக கூட்டணியில் இணைந்து 2024 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் தோல்வியை தழுவினார்.

    2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தனி அணியாக போட்டியிட்ட நிலையில், சில மாதங்களுக்கு முன்பு பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்தது. தமிழகத்தில் அந்த கூட்டணியின் தலைவராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருப்பார் என பாஜக அறிவித்தது. இதன் பின்னர் பாஜகவின் பார்வை ஓபிஎஸ் மீது படவில்லை. அதன்பின்னர் தமிழகம் வந்த பிரதமர் மோடி, அமித்ஷா போன்றோரை சந்திக்க ஓபிஎஸ்-க்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த ஓபிஎஸ் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினார்.

    அதன் பின்னரும் அதிமுகவில் இணைய பல கட்ட முயற்சிகளை செய்த நிலையில் அவை பலிக்காததால், அரசியலில் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து டிசம்பர் 15-ம் தேதி அறிவிப்பதாக கூறியிருந்தார் ஓ.பன்னீர்செல்வம். இந்தச் சூழலில், சமீபத்தில் டெல்லி சென்ற ஓபிஎஸ், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.

    இதனையடுத்து, டிசம்பர் 15-ம் தேதி நடைபெறவிருந்த ஓபிஎஸ்ஸின் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், எம்ஜிஆரின் நினைவுதினமான டிசம்பர் 24ஆம் தேதி ஓபிஎஸ், தனிக்கட்சி தொடங்குவதா, பாஜகவில் சேருவதா அல்லது அதிமுகவில் சேருவது தொடர்பான சட்டப் போராட்டத்தை தொடர்வதா என்ற தனது நிலைப்பாட்டை அறிவிப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமகளிரை முன்னேற்றி விட்டதாக கூறுவது வெட்கக்கேடு… திமுக மீது அன்புமணி தாக்கு
    Next Article பாமகவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது அதிமுக!. தொகுதி ஒதுக்கீட்டில் முட்டுக்கட்டை போடும் அன்புமணி!
    Editor TN Talks

    Related Posts

    தங்கம் விலை அதிரடி உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    April 4, 2026

    “நானே வேண்டாம் என்று எழுதி கொடுத்துவிட்டேன்”!. அண்ணாமலை விளக்கம்!

    April 4, 2026

    புதிய நீதிக்கட்சிக்கு பாஜக சீட் வழங்காதது ஏன்?. ஏ.சி.சண்முகம் விளக்கம்!.

    April 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தங்கம் விலை அதிரடி உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    “நானே வேண்டாம் என்று எழுதி கொடுத்துவிட்டேன்”!. அண்ணாமலை விளக்கம்!

    புதிய நீதிக்கட்சிக்கு பாஜக சீட் வழங்காதது ஏன்?. ஏ.சி.சண்முகம் விளக்கம்!.

    பிரதமர் மோடி தலைமையில் இன்று பாஜக மையக்குழு கூட்டம்!. தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை!

    குழந்தைகளை தாக்கும் புதிய கோவிட் வைரஸ்!. இந்தியாவிற்கு ஆபத்து?. அறிகுறிகள் என்ன?

    Trending Posts

    தங்கம் விலை அதிரடி உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    April 4, 2026

    “நானே வேண்டாம் என்று எழுதி கொடுத்துவிட்டேன்”!. அண்ணாமலை விளக்கம்!

    April 4, 2026

    புதிய நீதிக்கட்சிக்கு பாஜக சீட் வழங்காதது ஏன்?. ஏ.சி.சண்முகம் விளக்கம்!.

    April 4, 2026

    பிரதமர் மோடி தலைமையில் இன்று பாஜக மையக்குழு கூட்டம்!. தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை!

    April 4, 2026

    புதிய நீதிக்கட்சிக்கு சீட் இல்லை!. ஏ.சி.சண்முகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக! 

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.