மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரிகளின் மீதான திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12, 18 சதவீதத்தில் இருந்த ஜிஎஸ்டி வரிகள் நீக்கம் செய்யப்பட்டு 5, 18 சதவீதமாக மாற்றப்பட்டன. உணவு மற்றும் அன்றாட உபயோக பொருட்கள் மீதான ஜிஎஸ்டிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதுடன், சில பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி 2.0 என்ற புதிய வரியை அரசியல் கட்சிகள் ஆதரித்தும், எதிர்த்தும் வருகின்றனர். அந்த வகையில் ஜிஎஸ்டி சீர்திருத்தம் மற்றும் பொருட்கள் மீதான வரி குறைப்பை காங்கிரஸ் மூத்த தலைவர் பா. சிதம்பரம் விமரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ஜிஎஸ்டி சீர்திருத்தம் மற்றும் பொருட்கள் மீதான வரி குறைப்பு வரவேற்கத்தக்கது. ஆனால், 8 ஆண்டுகளுக்கு பிறகு சீர்திருத்தம் செய்திருப்பது மிகவும் காலத்தாமதமானது.

தற்போது ஜிஎஸ்டி வரியில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசை தூண்டியது எது? மந்தமான பொருளாதார வளர்ச்சியா? அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பா? பீகார் தேர்தலா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version