அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என்று தான் அப்படி கூறவே இல்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விளக்கம் அளித்துள்ளார்.
மேல்மருத்துவத்தூரில் நடைபெற்ற தேமுதிக மாவட்ட செயலாளர் வீட்டு இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நான் சொல்லாதது பேசாதது எல்லாம் செய்தியாக வந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்தி விட்டதாக நான் சொன்னேன் என்று அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது.
நான் அப்படி பேசவே இல்லை. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி. அந்த வார்த்தை என் வாயில் இருந்து வரவே வராது. எங்கள் கட்சிக்குள் பேசுவதை நீங்கள் நான் பேசுவதாக போடுவது மிகவும் கண்டனத்துகுரியது. இனி சொல்லாத செய்தியை வெளியிட்டால் நான் பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்ப்பேன்” என கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டதாக பிரேமலதா விஜயகாந்த் பேசியதாக செய்தி வெளியானதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
