எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது என்ற கேள்வியும், தேமுதிகவின் தேவைகள் என்ன என்பதும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

2005-ம் ஆண்டு விஜயகாந்தால் தொடங்கப்பட்ட தேமுதிக, 2006 சட்டசபை மற்றும் 2011 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு குறிப்பிட்ட வாக்கு வாங்கியை காட்டியதால், 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் அமர்ந்தார். 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அனைத்தும் வேறு விதமாக மாறியது. தேமுதிக எம்.எல்.ஏக்கள் பலர் மற்றுக் கட்சிக்கு மாறினர். 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்ற கூட்டணியை உருவாக்கி போட்டி போட்ட தேமுதிக படுதோல்வியை தழுவியது. அதன்பிறகு இன்று வரையிலும் தேமுதிகவால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை.

அடுத்தடுத்து நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் ஒவ்வொரு கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த தேமுதிக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. இந்த நிலையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் தேமுதிகவிற்கு, திமுக 6 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்ய சபா சீட் தருவதாகவும், அதிமுக 8 தொகுதிகள் தருவதாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கும் தேதிமுக, அதிமுகவிடம் இருந்து ஒரு ராஜ்ய சபா சீட் மற்றும் ஒரு மத்திய அமைச்சர் பதவியை கூடுதலாக கேட்கிறதாம்.

இதற்கு முன்னதாக தேமுதிகவில் எம்.எல்.ஏ ஆனவர்கள், கட்சியின் மாநிலத் அவைத் தலைவர் இளங்கோவன், பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன், எல்.கே சுதீஷ் என கிட்டத்தட்ட 10 தொகுதிகளாவது வேண்டும் என திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பிரேமலதா, விஜயகாந்த் 2வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ரிஷிவந்தியம் தொகுதியை குறி வைப்பதாக கூறப்படுகிறது. இவற்றை எல்லாம் எந்த கட்சி பூர்த்தி செய்ய தயாராக இருக்கிறதோ அந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என தேமுதிக தலைமை எண்ணி வருகிறதாம்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version