Close Menu
    What's Hot

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»தமிழகம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்ட அறப்போராட்டம்… ராமதாஸ் அறிவிப்பு
    அரசியல்

    தமிழகம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்ட அறப்போராட்டம்… ராமதாஸ் அறிவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 11, 2025Updated:December 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ramadoss 2025 05 f519539aa6a0ca16b8dffddbd3bc9133 3x2 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பாமக சார்பில் நாளை (டிச.12) ஆர்ப்பாட்ட அறப்போரட்டம் நடத்தப்படும் என டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

    சமூகநீதியின் பிறப்பிடம், தொட்டில் என்று போற்றப்படுவது தமிழ்நாடு. சமூக நீதி எனது உயிர் மூச்சுக் கொள்கை. இட ஒதுக்கீடு அனைவரின் பிறப்புரிமை. சமூகநீதி ஒவ்வொருவருக்கும் கிடைக்கச் செய்வது அரசின் தலையாய கடமை. நலிந்த பிரிவினர் முன்னேறுவதற்கு சமூகநீதி மிக மிக முக்கியம், சமூக நீதிக்காக 1980 முதல் இன்று வரை தொடர்ந்து மத்திய,மாநில அரசுகளை வலியுறுத்தி குரல் கொடுத்தும் போராடியும் வருகின்றேன்.

     அதனடிப்படையில் சமூகநீதியை உரியவாறு நிலைநாட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மிக மிக அடிப்படையானது.அதற்காக நான் பல கட்டங்களில் போராடியும் குரல் கொடுத்தும் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறேன். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு. அதனடிப்படையில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா,பீகார், ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தட்டிக் கழிப்பது ஏற்புடையதல்ல.

     தமிழ்நாட்டின் அதிகப் பெரும்பான்மை மக்கள் வன்னியர்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மிக மிக பின்தங்கி இருப்பது அனைவரும் அறிந்ததாகும். வன்னியர்கள் முன்னேறாமல் தமிழ்நாடு எப்படி முன்னேறிய மாநிலமாகக் கருத முடியும். வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு என்பது சமூகநீதியின் ஓர் அங்கமாகும். வன்னியர்களுக்கு 10.5 % இட ஒதுக்கீடு சட்டமாக்கப்பட்டு இன்றுவரை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது மிகுந்த வேதனையளிப்பதோடு கண்டனத்திற்குரியதாகும்.

    நாளை ( 12.12.2025) காலை 10 மணிக்கு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டியும், வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டியும், அனைத்து சாதி மக்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டியும் வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்ட அறப்போராட்டம் நடத்தப்பட உள்ளது.

    சமூக நீதியை வென்றெடுக்க நடைபெறும் அறப்போராட்டத்திற்கு சென்னையில் நான் தலைமை ஏற்கிறேன். பா.ம.க. கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, செயல் தலைவர் ஸ்ரீ காந்தி மற்றும் முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகிக்கிறார்கள். இதேபோல் தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையில் முன்பே அறிவித்துள்ளவாறு  மாநில பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் தலைமை ஏற்பார்கள்.

    இந்த போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள எங்களது மாநில, மாவட்ட, ஒன்றிய, மாநகர, பகுதி, வட்ட, நகர, பேரூர் பொறுப்பாளர்கள் செயல்வீரர்கள், இளைஞர்கள், பெண்கள் அதிக அளவில் பங்கேற்பார்கள். சமூகநீதியில் அக்கறை உள்ளவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் போராட்டத்தில் சமூகநீதியை வென்றெடுக்க பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 2 ஆண்டுகளில் 5.31 லட்சம் வீழ்ச்சி… அன்புமணி குற்றச்சாட்டு
    Next Article ‘சூர்யா 47’ படத்தின் OTT உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
    Editor TN Talks

    Related Posts

    திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்குதல் செய்தார் தவெக தலைவர் விஜய்..!

    April 2, 2026

    பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் ஏன் தாமதம்?

    April 2, 2026

    திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம்!

    March 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    Trending Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    April 5, 2026

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    April 5, 2026

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    April 5, 2026

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    April 5, 2026

    “நாங்கள் அவரை மீட்டுவிட்டோம்”!. ஈரானால் வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15 விமானத்தின் 2வது விமானி மீட்பு!. டிரம்ப் உறுதி!

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.