Close Menu
    What's Hot

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»கொலை செய்யப்பட்ட மாணவர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரண நிதி… ராமதாஸ் வலியுறுத்தல்
    அரசியல்

    கொலை செய்யப்பட்ட மாணவர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரண நிதி… ராமதாஸ் வலியுறுத்தல்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 8, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ramadoss 2025 05 f519539aa6a0ca16b8dffddbd3bc9133 3x2 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கும்பகோணம் அருகே சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட மாணவரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

    நடுரோட்டில் பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்டது தமிழகத்தின் சமுதாய சீரழிவை வெளிப்படுத்துகிறது. மாணவரை இழந்துபாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தமிழக அரசு ரூபாய் 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும்

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், இனாம் கிளியூர் ஊராட்சி, வடக்கு தெருவை சேர்ந்த ஞானசேகரன் ராஜலட்சுமி  தம்பதியினரின் மூத்த மகன் நாகராஜ் கல்லூரியில் படித்து வருகிறார். இரண்டாவது மகன் கவியரசன் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

    அதே பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், கடந்த 4ம் தேதி பள்ளி விட்டு வீடு திரும்பிய கவியரசனை நடுரோட்டில் 11-ம் வகுப்பு மாணவர்கள் 15 பேர் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    காயமடைந்த மாணவர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மாணவனுக்கு தலையில் ஏற்பட்ட ரத்த கசிவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் முன்னேற்றம் இல்லாததால் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று மதியம் அனுப்பி வைக்கப்பட்டார்.

     இந்தநிலையில் சிகிச்சையில் இருந்த கவியரசன் உயிரிழந்தார்.  இந்தசூழலில் மாணவனை தாக்கிய 15 சக மாணவர்கள் மீது அடிதடி, கொலை உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு தஞ்சை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.

     மாணவர்களிடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு முக்கிய காரணம் போதைப் பழக்கமும், கட்டுப்பாடு இல்லாத வளர்ப்பு முறையும் என்பது தெரிகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் இத்தகைய சிந்தனை வளர்ந்துள்ளது சமுதாயத்தின் சீரழிவை காட்டுகிறது. இதனை தமிழக அரசும், பள்ளிக் கல்வித் துறையும் உணர வேண்டும். பள்ளிகளில் நன்னடத்தை வகுப்புகளை முறையாக செயல்படுத்தாததே காரணம்.  அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நன்னடத்தை வகுப்பை கட்டாயமாக்க வழிவகை செய்ய வேண்டும்.

    உயிரிழந்த மாணவர் குடும்பம் தற்போது நிற்கதியாக உள்ளது.  தங்கள் குடும்பத்தின் எதிர்காலம் இப்படி ஆகிவிட்டதே என்ற வேதனையில் குடும்பத்தினர் உள்ளனர். இந்த நிலைக்கு தமிழக அரசும், பள்ளிக் கல்வித் துறையும் காரணம் என்ற நிலையில் இறந்த மாணவரின் குடும்பத்திற்கு அரசு ரூ. 50 லட்சம் நிவாரண நிதியாக வழங்க வேண்டும். அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும்.

    குற்றத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீண்டும் அத்தகைய செயலில் ஈடுபடாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற காலங்களில் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களிடையே இத்தகைய பிரச்சனை ஏற்படாத வகையில் கல்வித்துறை உரிய பாதுகாப்பு நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரூ.888 கோடி வேலைவாய்ப்பு ஊழல்…. அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
    Next Article மதுரை மாவட்ட நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்… போலீஸ் விசாரணை
    Editor TN Talks

    Related Posts

    திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்குதல் செய்தார் தவெக தலைவர் விஜய்..!

    April 2, 2026

    பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் ஏன் தாமதம்?

    April 2, 2026

    திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம்!

    March 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    Trending Posts

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    April 10, 2026

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    April 10, 2026

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    April 10, 2026

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    April 10, 2026

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.