பாமக என்ற கட்சியை ராமதாஸ் என்ற தனி மனிதன் ஆரம்பித்த கட்சி என்பதால் அன்புமணி தனியாக கட்சியை ஆரம்பித்து கொள்ளலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சிக்கு சட்ட விரோதமாக செயல்பட்டதால் அவரை கட்சியில் இருந்து நீக்குகிறேன். அவருடன் கட்சி ரீதியாக யாரும் தொடர்பு வைத்து கொள்ள வேண்டாம் என கூறியுள்ளார். மேலும், அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு அனுப்பி வைத்த 16 குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதத்திலும் பதில் அளிக்காமல் இருமுறை அவகாசம் கொடுத்தும், பதில் ஏதும் எழுத்து பூர்வமாக நேரில் வந்து விளக்கம் அளிக்கவில்லை. அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பதில் அளிக்காமல் இருப்பதை அவரே ஒப்பு கொண்டுள்ளார்.
அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் உண்மையானது என கருதுப்படுகிறது. அவரை கட்சியின் அடிப்படை பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணியுடன் நிர்வாகிகள் யாரும் தொடர்பு வைத்து கொள்ள கூடாது. அன்புமணி வேண்டுமானால் தனியாக கட்சி ஆரம்பித்துக் கொள்ளலாம் என்று மூன்று முறை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.
பாமகவில் இத்தனை நாட்களாக தந்தை, மகன் இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், கட்சியை விட்டே அன்புமணியை நீக்கியுள்ளார். தனியாக கட்சி ஆரம்பிக்குமாறு ராமதாஸ் கூறியுள்ளார். இதனால் அன்புமணி என்ன செய்யப்போகிறார்? தனது ஆதரவாளர்களை திரட்டி தனி கட்சி தொடங்குவாரா? பாகமவுக்கு உரிமை கொண்டாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.