சென்னையில் நேற்றிரவு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ரகசிய இடத்தில் தங்கியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவர், நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் பட்டினப்பாக்கத்தில் தவெக தலைவர் விஜய்யை சுமார் 2 மணி நேரம் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதனால் தவெகவில் அவர் சேரக்கூடும் என வெளியாகி வந்த தகவல் உறுதியானது. இந்த சந்திப்புக்குப் பிறகு காரில் புறப்பட்ட செங்கோட்டையன், முட்டுக்காடு பகுதிக்கு சென்றார். பின்னர் அங்குள்ள ரகசிய இடத்தில் செங்கோட்டையன் தங்கியிருந்தார்.
இந்நிலையில், தவெகவில் இணையும் திட்டத்துடன் விஜய்யின் தவெக அலுவலகம் இருக்கும் பனையூருக்கு இன்று காலை காரில் செங்கோட்டையன் புறப்பட்டுச் சென்றார்.
அதிமுகவினர் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்திலேயே அவர் ரகசிய இடத்தில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
