கார்த்திகை வாழ்த்து போஸ்டரை அழித்துவிட்டு, சமூகவலைதள பக்கத்தில் தவெக மூத்த தலைவர் செங்கோட்டையன் மீண்டும் வெளியிட்டுள்ளார்.
கார்த்திகை தீப விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வாழ்த்து தெரிவித்து சமூகவலைதள பக்கத்தில் போஸ்டரை வெளியிட்டு தவெக மூத்த தலைவர் செங்கோட்டையன் பதிவிட்டிருந்தார். அதில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இருந்தது.
இது விவாதப் பொருளை ஏற்படுத்தியதால், அந்த பதிவை செங்கோட்டையன் உடனடியாக நீக்கினார். இதுகுறித்த செய்திகள் வெளியான நிலையில், தற்போது செங்கோட்டையன் அந்தப் பதிவை மீண்டும் பதிவேற்றி உள்ளார்.
ஏன் அந்தப் பதிவை நீக்கினார், ஏன் மீண்டும் அதை செங்கோட்டையன் வெளியிட்டார் எனத் தெரியவில்லை.
