அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் கிட்டத்தட்ட 9 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்ற முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன் அவர்கள் இன்று தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமாவை அறிவித்த பின்னர் சென்னைக்கு விரைந்து சென்றுள்ளார்.

சிறிது நேரத்துக்கு முன்பு பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் வீட்டிற்கு சென்று, அங்கு விஜயுடன் ஆலோசனையும் நடத்தி உள்ளார். இவையெல்லாம் அடுத்தடுத்து தொடர்ச்சியாக நடப்பதை பார்க்கையில் நிச்சயமாக செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது உறுதியாகிவிட்டது.
தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையனிடம் நிருபர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைய போகிறீர்களா என்று கேட்ட கேள்விக்கு, செங்கோட்டை அவர்கள் இன்று ஒரு நாள் மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று பதில் அளித்திருக்கிறார்.
எனவே கூடிய விரைவில், இன்னும் சரியாக சொல்லப்போனால் நாளையே இது சம்பந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று நாம் எதிர்பார்க்கலாம். தற்பொழுது தமிழக வெற்றி கழகத்தில் புஸ்ஸி ஆனந்திற்கு எந்த அளவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோ அதே அளவுக்கு நிகரான சமமான அதிகாரம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

