Close Menu
    What's Hot

    ‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ்: பார்த்திபன் வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு!

    கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிருப்தி … அமைச்சர் பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.  ராஜினாமா!

    “திரையில் விவசாயி வேடம்; நிஜத்தில் கள்ள மௌனம்” – முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»பொம்மை முதலமைச்சர்… ஸ்டாலின் மீது இபிஎஸ் மீண்டும் தாக்கு
    அரசியல்

    பொம்மை முதலமைச்சர்… ஸ்டாலின் மீது இபிஎஸ் மீண்டும் தாக்கு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 26, 2025Updated:November 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பொம்மை முதலமைச்சர் என்று முதலமைச்சர் ஸ்டாலினை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் விமர்சித்துள்ளார்.

    விவசாயிகளுக்கு ஸ்டாலின் துரோகம் செய்து விட்டதாக அண்மையில் எடப்பாடி பழனிசாமி சாடியிருந்தார். இதற்கு ஈரோடு விழாவில் பேசுகையில் முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியை பச்சைத் துரோகி என பதிலடி கொடுத்திருந்தார்.

    இந்நிலையில், எக்ஸ் பக்க பதிவில் முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார் அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

    ஈரோட்டில் மேடை ஏறிய பொம்மை முதலமைச்சர், வழக்கம் போல என்னைப் பற்றியே புலம்பித் தள்ளியுள்ளார். அவர் எதிர்க்கட்சியில் இருந்த போது, எது நடந்தாலும் “ஆக, எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்” என்று கூறிக்கொண்டே இருந்த பழக்க தோஷம் மாறவில்லை போல, “நான் டெல்டாக்காரன்” என்று பச்சைதுண்டு போட்டு டயலாக் பேசிவிட்டு, மீத்தேன்- ஹைட்ரோகார்பன் திட்டக் கையெழுத்து போட்டு, அதே டெல்டாவை பாலைவனமாக்கத் துடித்த துரோகத்தின் தொடர்ச்சியாக தானே, இப்போது நெல்மணிகள் நனைவதைக் கண்டும் காணாமல் இருந்தார் இந்த துரோகி ஸ்டாலின்?

    ஆட்சிக்கு வந்து இந்த நான்கரை ஆண்டுகளும், விவசாயிகளுக்கு அடிப்படைத் தேவையான குறுவை சாகுபடிக்கான பயிர்க் காப்பீட்டைக் கூட அளிக்காமல், முறையாக நீரைத் திறக்காததால், கடைமடை வரை நதிநீர் சென்று சேராததால், டெல்டா பகுதியில் 2 லட்சம் ஏக்கர் வரை தொடர்ந்து பாதித்து, விவசாயிகள் தவித்த போது கூட, விவசாயிகள் மீது அக்கறை கொள்ளாமல் வஞ்சித்த துரோகி தானே நீங்கள்? உங்கள் பக்கம் இருந்த மைக்கை, மக்கள் பக்கம் திருப்பி இருந்தால், அவர்களே சொல்லியிருப்பார்கள், இந்த எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு செய்தன என்னவென்று!

    நூறு ஏரிகளுக்கு நீரேற்றும் சரபங்கா திட்டம் முதல், தலைவாசல் கால்நடைப் பூங்கா, அத்திக்கடவு அவிநாசி திட்டம் வரை மேற்கு மண்டலத்திற்காக நான் கொண்டுவந்த எண்ணற்ற திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் போது, இதெல்லாம் நான் கொண்டு வந்த திட்டம் என்று தெரியவில்லையா இந்த பொம்மை முதல்வருக்கு? கோவை மட்டுமல்ல, மதுரை மெட்ரோவும் வர வேண்டும் என இப்போது கூட மாண்புமிகு இந்தியப் பிரதமர் மோடி அவர்களை சந்தித்த போது கோரிக்கை வைத்துள்ளேன் நான்.

    எங்கள் அரசு முன்மொழிந்த மெட்ரோ திட்டத்திற்கான DPR-ஐக் கூட முறையாக சமர்ப்பிக்கத் தெரியாமல், உங்கள் அரசு சமர்ப்பித்த DPR-ல் உள்ள முரண்பாடுகளை மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், அதையெல்லாம் நிவர்த்தி செய்து மறு சமர்ப்பிப்பு செய்வதை விட்டுவிட்டு, இதை வைத்து தனது அற்ப அரசியல் லாபத்தை தேடிக்கொள்வதற்கு உண்மையிலேயே ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். “அஇஅதிமுக ஆட்சியில் கோவைக்கும் மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்டம் வரும்” என்று சொன்னதைக் கேட்டு வயிற்றெரிச்சல்பட்டு, திமுக ஆட்சி என்பதால் புறக்கணிப்பா? என்று கேட்கிறார். ஸ்டாலின் அவர்களே- நீங்கள் ஒரு கையாலாகாத, நிர்வாகத் திறனற்ற முதல்வர் என்பதைத் தான் நாங்கள் எப்போதும் கூறுகிறோம். உங்கள் ஆட்சி இருக்கும் போது தான், சென்னை மெட்ரோ 2-ம் கட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என மாண்புமிகு உள்துறை அமைச்சரை சந்தித்து நான் வலியுறுத்தினேன்.

    எங்களின் கோரிக்கையினை ஏற்று தான், மத்திய அரசும் ரூ. 63,246 கோடியை ஒதுக்கி உத்தரவிட்டது. ஆக, அதிமுக  எப்போதும் மக்களுடன் நின்று, மக்களுக்கு நன்மை செய்து வருகிறது. நீங்களோ, நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டு, மக்களுக்கு எந்த நன்மையும் வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளீர்கள்.

    இப்போது சொல்லுங்கள், யார் துரோகி என்று! ரெட் ஜெயண்ட் வாசலுக்கு ரெய்டு வந்ததும் வியர்க்க விறுவிறுக்க, வியர்வையைத் துடைக்க கர்சீப்பைக் கூட மறந்துவிட்டு டெல்லிக்கு பதறிப் பறந்தீர்களே- அதையெல்லாம் மறந்துவிட்டீர்களா திரு. ஸ்டாலின் அவர்களே? நான் எப்போதும் என் உயிருக்கு உயிரான தமிழக மக்களுக்காக எதையும் செய்யத் தயார்! ஆனால், ஒரே ஒரு கேள்வி- எல்லாவற்றையும் எடப்பாடி பழனிசாமி தான் செய்ய வேண்டும் என்றால், நீங்கள் எதற்கு சார் முதல்வராக இருக்கீங்க?

    இவ்வாறு அந்த பதிவில் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்திய பங்குச்சந்தைகளில் எழுச்சி… சென்செக்ஸ் 1,022 புள்ளிகள் உயர்வு
    Next Article பட்டினப்பாக்கத்தில் விஜயை சந்தித்து செங்கோட்டையின் ஆலோசனை !!! அரசியலில் திடீர் திருப்பம் !!!
    Editor TN Talks

    Related Posts

    ‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ்: பார்த்திபன் வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு!

    August 3, 2026

    கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிருப்தி … அமைச்சர் பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.  ராஜினாமா!

    August 3, 2026

    “திரையில் விவசாயி வேடம்; நிஜத்தில் கள்ள மௌனம்” – முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு!

    August 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ்: பார்த்திபன் வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு!

    கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிருப்தி … அமைச்சர் பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.  ராஜினாமா!

    “திரையில் விவசாயி வேடம்; நிஜத்தில் கள்ள மௌனம்” – முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு!

    பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது-மீறி ஓட்டினால் அபராதம்: தமிழக அரசு அதிரடி

    அண்டை மாநிலங்களில் குவியும் தொழில் முதலீடுகள்… தவெக ஆட்சியில் பெரும் வீழ்ச்சியில் தமிழகம் – நயினார் குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.