அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே தனது நோக்கம் என்று செங்கோட்டையன் மீண்டும் கூறியுள்ளார்.

கடந்த 5ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியை தெரிவித்ததோடு, அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். மேலும் அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய 10 நாட்கள் கெடு விதிக்கப்பட்டது. இந்த கெடு இன்றுடன் நிறைவடையும் நிலையில் அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.

இந்த சூழலில், இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது நோக்கம். அதிமுகவை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்பதற்காகவே மனம் திறந்து பேசினேன். மக்கள் மற்றும் தொண்டர்களின் கருத்தையே நான் பிரதிபலித்தேன். அண்ணாவின் பெயரால் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அதிமுகவை கட்டுக்கோப்பாக கட்டி காத்தனர். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்று அண்ணா கூறியுள்ளார்.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர்னெ டெல்லி பயணம் மேற்கொண்ட செங்கோட்டையன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். தனக்கு எதிராக செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்து பேசியது எடப்பாடி பழனிசாமிக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.  மறப்போம் மன்னிப்போம் என்பதை நினைவூட்டி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என பேசியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version