புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கழிவு கலந்த தண்ணீர் விநியோகிப்பதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.
புதுச்சேரியில் கடந்த வாரம் பொதுப்பணித்துறை மூலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் குழாய் மூலம் புதுச்சேரி முழுவதும் வழங்கப்பட்டு வரும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் புதுச்சேரி நகரப் பகுதியைச் சேர்ந்த உருளையன்பேட்டை கொசபாளையம், சக்தி நகர், காமராஜர் நகர், முத்தியால்பேட்டை, முதலியார் பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் குடிநீரை பயன்படுத்தி வந்தனர். இதனால் சிலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு தீவிர வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
தீவிர சிகிச்சைக்கு பிறகு நூற்றுக்கும் மேற்பட்டோர் வீடு திரும்பிய நிலையில், அதிக பாதிப்புள்ளவர்களுக்கு மட்டும் ஒரு வார்த்திற்கு மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உருளையன்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குப்புசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொது மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.