திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராக உள்ள புராண கதையில் அல்லு அர்ஜூன் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்த ‘அலா வைகுந்தபுரமுலூ’ திரைப்படம் பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை படைத்தது. இந்தநிலையில், இருவரும் அண்மையில் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது, புராணக் கதை ஒன்றை அல்லு அர்ஜூனுவிடம் ஸ்ரீனிவாஸ் தெரிவித்ததாகவும், அது அல்லு அர்ஜூனுக்கு பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் புராண கதையில் அல்லு அர்ஜூன் நடிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த திரைப்படம், அதிநவீன தொழில்நுட்பத்துடன் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version