எதிர்கட்சிகளுக்கு சவாலாக விளங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்துள்ளார்.
இசைஞானி இளையராஜா திரையின் இசை உலகில் 50 ஆண்டுகள் கடந்த நிலையில் தமிழக அரசு சார்பில் ‘சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா பொன்விழா ஆண்டு 50’ என்ற தலைப்பில் பாராட்டு விழா நடைபெற்றது. நேறு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, “தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இந்திய அரசியலில் நட்சத்திரமாக, இந்திய நாட்டை ஆளும் கட்சியினருக்கு புதிய, பழைய எதிர்கட்சியினருக்கும் சவாலாக 2026 தேர்தலை பார்க்கலாம் என்று தனக்கே உரிய புன்னகையுடன் முதலமைச்சர் செயல்படுவதாக தெரிவித்தார். மேலும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தனது வணக்கத்தையும் கூறி கொண்டார்.
தவெக தலைவர் விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த சூழலில் எதிர்கட்சிகளுக்கு முதலமைச்சர் சவாலாக இருப்பதாக ரஜினி கூறியதால் அவர் மறைமுகமாக விஜய்யை எதிர்கிறாரோ என்று கூறப்படுகிறது.