சமூக வலைதளங்களில் அதிக பின் தொடர்பவர்களை கொண்ட அரசியல்வாதியாக தவெக தலைவர் விஜய் உள்ளார்.

வாழ்வின் ஒரு அங்கமாக மாறியுள்ள சமூக வலைங்களில் அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள், நட்சத்திரங்கள், பொதுமக்கள் என அனைவரும் ஆக்டிவாக இருக்கின்றனர். தற்போது அனைத்தையும் பகிரும் ஒரு தளமாக சமூக வலைதளம் மாறியுள்ளது. இந்த சூழலில், அரசியல் வாதிகளை அதிகம் பின் தொடர்வோர் எண்ணிக்கையில் விஜய் முதலிடத்தில் உள்ளார்.

விஜய் கணக்கை இன்ஸ்டகிராமில் 1.46 கோடி பேரும், ஃபேஸ்புக்கில் 77 லட்சம் பேரும், எக்ஸ் தளத்தில் 55 பேரும் பின் தொடர்கின்றானர். இவரை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இன்ஸ்டகிராமில் 18 லட்சம் பேரும், ஃபேஸ்புக்கில் 31 லட்சம் பேரும் எக்ஸ் தளத்தில் 40 லட்சம் பேரும் பின் தொடர்கின்றானர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்ஸ்டகிராமில் 63 ஆயிரம் பேரும், ஃபேஸ்புக்கில் 1.68 லட்சம் பேரும், எக்ஸ் தளாத்தில் 6.55 லட்சம் பேரும் பின் தொடர்கின்றனர். இவர்களின் வரிசையில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இன்ஸ்டகிராமில் 15 லட்சம் பேரும், ஃபேஸ்புக்கில் 5 லட்சம் பேரும், எக்ஸ் தளத்தில் 10 லட்சம் பேரும் பின் தொடர்கின்றனர்.

விஜய் திரை பிரபலமாக இருந்ததால் அவரை பின் தொடர்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

Share.
Leave A Reply

Exit mobile version