பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து சவுமியா அன்புமணி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பாமகவின் செயல்தலைவராக உள்ள ஸ்ரீகாந்திமதி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை ராமதாஸ் வெளியிட்டார்.
பசுமைத் தாயகம் என்பது இந்தியாவின் சுற்றுச்சூழலியல், சமூகநலச் செயல்பாடுகளில் ஈடுபடும் ஒரு தன்னார்வ அரசு சார்பற்ற அமைப்பு ஆகும். இது பாமகவின் சுற்றுச்சூழல் பிரிவாகச் செயல்படுகிறது.
இந்த அமைப்பு தமிழகம், புதுவை, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது. இந்த அமைப்பு ஐநா சபையின் சிறப்பு ஆலோசனையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
