இந்துசமய அறநிலையத்துறையின் நிதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள் கட்டக்கூடாது என்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு..

“கொடுத்த காசுக்கு மேல என்னமா கூவுறான்” என்ற வடிவேலு காமெடி போல, BJP கட்சியினரே ஆச்சரியப்படும் அளவுக்கு “ஃபீல் பண்ணிக் கூவும்” மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்!

கேள்விக்குறிபோல் வளைந்த முதுகா? உரிமைகளுக்காகத் தலைநிமிர்ந்து போராடும் தன்மானமா?

மனிதரை மனிதர் தாழ்த்தி, பிற்போக்குத்தனங்களை நோக்கித் தள்ளும் காவிக் கொள்கையா? மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என முற்போக்கு எண்ணங்களால் முன்னேற்றும் கல்விக் கொள்கையா?

தமிழ்நாடு விடை சொல்லும்! துரோகக் கூட்டத்தை விரட்டியடிக்கும்!

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version