Close Menu
    What's Hot

    தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கியது திமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் இன்று பேச்சுவார்த்தை

    இளைஞர்களே நோட்!. சென்னையில் ஆப்பிள் புதிய அலுவலகம்!. ஆட்சேர்ப்பு பணிகள் தொடக்கம்!

    மகளிர் டி20!. 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது: தேஜ் பிரதாப் யாதவ்
    அரசியல்

    எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது: தேஜ் பிரதாப் யாதவ்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tej
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார். அவருக்கு ‘ஒய் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் இதனை கூறியுள்ளார்.

    பொறுப்பற்ற நடத்தை காரணமாக தேஜ் பிரதாப் யாதவை ஆறு ஆண்டுகளுக்கு ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியில் இருந்து நீக்குவதாக அவரது தந்தையும், கட்சியின் நிறுவனருமான லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார். மேலும் பிரதாப்புடனான அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டித்து கொள்வதாக அப்போது தெரிவித்தார்.

    இதன் பின்னர் ஜன் சக்தி ஜனதா தளம் என்ற தனி கட்சியை தேஜ் பிரதாப் யாதவ் தொடங்கினார். தற்போது நடைபெற்று வரும் பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் அவரது கட்சி 22 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் வைஷாலி மாவட்டத்தில் உள்ள மஹுவா தொகுதியில் அவர் போட்டியிட்டுள்ளார்.

    இந்நிலையில், பாட்னாவில் செய்தியாளர்களை தேஜ் பிரதாப் யாதவ் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “எனக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. நான் எனது எதிரிகளால் கொல்லப்படலாம். எனது இளைய சகோதரர் தேஜஸ்வி யாதவுக்கு எனது ஆசிகள் என்றும் இருக்கும். அவர் மென்மேலும் வளர்ந்து பல உயரத்தை எட்ட வேண்டுமென விரும்புகிறேன்” என்றார்.

    பிஹார் மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதனால் இன்று மாலை உடன் அங்கு தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஹாங்காங் சிக்ஸ்: பாகிஸ்​தானை வீழ்த்​தி​யது இந்​தியா
    Next Article மக்களின் வாக்குரிமையைக் காக்க திமுக உங்கள் தோழனாக துணை நிற்க தயாராக இருக்கிறது-முதல்வர் ஸ்டாலின்
    Editor TN Talks

    Related Posts

    தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கியது திமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் இன்று பேச்சுவார்த்தை

    February 22, 2026

    பழனிசாமிக்கு பாடம் புகட்டிய பிரேமலதா! நழுவவிட்ட அதிமுக.. தட்டித்தூக்கிய திமுக..! எப்படி?

    February 20, 2026

    திமுக 176 இடங்களில் போட்டியா? கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு?

    February 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கியது திமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் இன்று பேச்சுவார்த்தை

    இளைஞர்களே நோட்!. சென்னையில் ஆப்பிள் புதிய அலுவலகம்!. ஆட்சேர்ப்பு பணிகள் தொடக்கம்!

    மகளிர் டி20!. 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

    காவி சிந்தனையில் எடப்பாடி பழனிசாமி!. செல்வபெருந்தகை கண்டனம்!

    மெகா மூவ்!. திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 28 சீட்கள் உறுதி?.

    Trending Posts

    February 21, 2026

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.