திருச்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் உங்கள் வாக்கு எதையும் நிறைவேற்றாத திமுகவுக்கா என விஜய் கேட்கும்போது அங்கிருந்த தொண்டர்கள் இல்லை, கேட்கவில்லை என்று கூச்சலிட்டனர்.
தவெக எனும் கட்சியை தொடங்கிய விஜய், 2026 சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு என கூறியிருந்தார். விக்கிரவாண்டி, மதுரை மாநாடுகளை தொடர்ந்து மக்களை சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதால் நடிகர் விஜய் கூறியிருந்தார். அதன்படி இன்று திருச்சி மரக்கடை மார்க்கெட்டில் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட காவல்துறை தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டது.
இன்று காலை 10.30 மணிக்கு பேச விஜய்க்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், பிரச்சாரத்திற்கு விஜய் செல்லவே மதியம் 2 மணி ஆனது. கட்டுக்கடங்காத கூட்டத்தால் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் விஜய் பிரச்சார வாகனத்தின் மீது ஏறி பேச தொடங்கினார். அப்போது விஜய் பேசியது மைக் வேலை செய்யாததால் அது கேட்கவில்லை. சரியாக திமுக மற்றும் அமைச்சர்களை டார்கெட் செய்து விஜய் பேசியபோது, யாருக்கும் கேட்கவில்லை. விஜய் கத்தி கத்தி பேசியபோது அதுவும் தனக்கு கேட்கவில்லை என கீழே நின்றிருந்தவர்கள் கூச்சலிட்டனர்.
மேலும் சொன்னதை நிறைவேற்றாத திமுகவுக்கா வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில் உங்கள் வாக்கு இருக்குமா என்று கேள்வி எழுப்பினார். அப்போது தொண்டர்கள் இல்லை இல்லை என்று கத்தினர். காலையில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி அளித்து அவர் பேசுவார் என 8 மணி நேரமாக காத்திருந்த தொண்டர்கள் விஜய்யின் பேச்சை கேட்க முடியாமல் திணறினர்.